இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடும் முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இவர் 1948ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் 1979ஆம் ஆண்டு மறைந்தார்.
இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்துள்ளது.
0 Comments