உலக மனிதநேயம் தினம் 2009 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.
முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.
இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பது தான் உயர்வான செயல். மனிதநேயத்தோடு இருக்க வேண்டுமாயின் நாம் பணக்காரனாகவோ உயர்ந்த அறிவுடையவர்களாக இருக்க வேண்டியதில்லை.
நாம் மனிதத்தை மதித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள் எல்லா மனிதர்களும் மனிதநேயத்துடன் வாழ்வார்களேயானால் இங்கு யாரும் கண்ணீர் சிந்தவேண்டி இருக்காது. எல்லோரும் மகிழ்வாக இங்கே வாழலாம்.
மனிதர்களை நேசிப்போம் இங்குள்ள புல், பூண்டு, பறவைகள், மிருகங்கள் என இந்த இயற்கையையும் நாம் நேசிப்போம்.
இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்கு தெரியாத கடவுளை வழிபடுவதும் வீணாகும். நல்ல மனிதர்களாக மனிதநேயம் உள்ளவர்களாக நாம் எப்போதும் வாழ வேண்டும்.
0 Comments