சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டலம், மேலமெஞ்ஞானபுரம் சேகரம் பரிசுத்த பெத்தேல் ஆலயம் நூற்றாண்டு விழா (1922 - 2022), இறையருளால் மிக சிறப்பாக (செப்டம்பர் 15 - 18, 2022) நடைபெற்றது. ஆலய வரலாறு வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இன்றைய தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் இருந்து, திருநெல்வேலி பிராதன சாலையில் அமைந்துள்ள மேலமெஞ்ஞானபுரம் என்ற கிராமத்தில், 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் காரைக்கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளாக வழிநடத்திய எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி செலுத்தி, இறைமக்கள் தங்களை அர்ப்பணிக்கும் வண்ணம் இந்த பண்டிகை ஆசரிக்கப்பட்டது. பண்டிகை அழைப்பிதழ் காண இங்கே கிளிக் செய்யவும்.
சேகர தலைவர் அருட்திரு. டேனியேல் தனசன், சேகர குரு அருட்திரு. ராஜகுமார் சாமுவேல், சபை ஊழியர் திரு. செல்வராஜ் மற்றும் நிர்வாகக் குழுவினர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை மிக நேர்த்தியாக செய்தனர்.
முதல் நாள் (15.09.2022) நூற்றாண்டு விழா பவனி, ஆயத்த ஆராதனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பாக அன்று சேகர குரு அருட்திரு. ராஜகுமார் சாமுவேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் விழாவின் அலங்கார மேடையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Acknowledgement
Meyego
Mannin Mainthan
0 Comments