"வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய்" உலக தேங்காய் நாள் ( world coconut day ) ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப் படுகிறது.
இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடம் வகிக்கிறதால் நம் நாட்டிலும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில்தான் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
0 Comments