தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு போலி (கள்ள) பிரசங்கி பணத்தை பற்றியும் தங்கத்தை பற்றியும் பொருளாதார ஆசிர்வாதத்தை பற்றியும் எப்படி நாம் ஜசுவரியவானாக முடியும் என்பதை பற்றியும் பயங்கரமாக பேசுகிறார்... Click here to read about போலிப் போதனை
பேசி முடித்த பிறகு.... அவரே சொல்கிறார்....
"இப்ப ஒரு விசேஷ காணிக்கை எடுக்கப்படும் அதிலே நீங்கள் உங்களிடம் இருக்கும் பேஸ்ட் (Best) அதாவது சிறந்ததை போடுங்கள் என்று....."
ஒருவர் கார் சாவியை போடுகிறார்
ஒருவர் மோதிரம் போடுகிறார்
ஒருவர் தங்க செயினை கழற்றி போடுகிறார்...
ஒருவர் விலை உயர்ந்த கைகடிகாரத்தை கழற்றி போடுகிறார்
ஒருவர் தனது பைக் சாவியை போடுகிறார்...
இப்படி ஒரு பத்து பேர் போட்டதை பார்த்த மக்களும் தானாக முன்வந்து தங்களிடம் இருந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் போடுகிறார்கள். அந்தக் கள்ளப் பிரசங்கி எல்லாவற்றையும் சுருட்டி கொண்டார்...
பின்னர் தான் தெரிய வந்தது.... "அந்த பத்து பேரும் அந்த கள்ளப்பிரசங்கியின் செட்டப் ஆட்கள் என்று...."
நண்பர்களே இப்படி ஒரு மானங்கெட்ட தரங்கெட்ட செயல்களை செய்ய எப்படி தான் இவர்களுக்கு மனசு வருகிறதோ என்று தெரியவில்லை. இது எவ்வளவு பெரிய துணிகரமான பாவம். இந்த நாட்களில் இப்படிப்பட்ட வஞ்சக ஊழியர்கள் எழும்பி இருக்கிறார்கள்.
ஆண்டவர் அருளும் இரட்சிப்பு, ஆவியின் வரங்கள் கனிகள், மன்னித்தலின் மேன்மை, சிலுவையின் மேன்மை, பரிசுத்த ஜீவியம், மனந்திரும்புதல், ஆத்துமாக்களை ஆதாயம் செய்தல், தேவ சித்தம் நிறைவேற்றுதல்
கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருத்தல், நியாயதீர்ப்பு மற்றும் நித்திய வாழ்வு என இப்படிபட்ட விசயங்கள் எதுவுமே பிரசங்கத்தில் இல்லாமல் வெறும் பணம் பணம் தங்கம் சொத்து சுகம் கார் பங்களா என்று உலக காரியங்களை மட்டும் பேசும் எந்த ஒரு ஊழியனும் கள்ள பிரசங்கியே... அதற்கு செவி சாய்க்கும் அனைவருமே அந்த கள்ள பிரசங்கியால் வஞ்சிக்கப்பட்டவர்களே.....
மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சபையே! ஊழியக்காரர்களே!!! இப்படியும் மக்களை ஏமாற்றி வஞ்சக வலையில் வீழ்த்தும் இந்த கும்பல் இந்தியாவில் உலாவி கொண்டிருக்கும் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
Acknowledgement
Article was written by
SD. Livingston
Mumbai.
0 Comments