Ad Code

போலிப் போதனை ஓர் அறிமுகம் What is False Teaching? Misinterpreting the Bible

போலி உபதேசம் என்பது என்ன?
இறைவார்த்தையை சத்தியத்தின் அடிப்படையில் போதிக்காமல், அதற்கு மாறாக போதிப்பதாகும். போலி உபதேசம் கள்ள உபதேசம், துர் உபதேசம், என பலப் பெயர்கள் உண்டு. எப்படியெனில்,

🔗வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்.

🔗தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி, வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை அல்லது பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்.

🔗சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், சுய வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக கருதி, தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்.

போலி உபதேசங்கள் உருவானது எப்படி? 
இந்த கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் காலம் முடிவதற்கு முன்பே கள்ள உபதேசங்கள் முளைத்துவிட்டன. விதை விதைக்கும் எல்லா இடங்களிலும் களையும் முளைக்கும் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்திலும்கூட துர்உபதேசங்கள் சபைகளில் இருப்பதை ஆண்டவர் சுட்டிக்காட்டுவதை நாம் காணலாம். தவறான போதனை எவரிடமிருந்தும் வரலாம் என்பது சற்று அதிர்ச்சியளிக்கக் கூடிய கசப்பான உண்மைதான். 

சபைக்கான எச்சரிப்பு என்ன?
வேதாகமே எந்த கிறிஸ்தவ உபதேசத்திற்கும் அடிப்படியாக இருக்கவேண்டும். இதற்கு மாறாக கர்த்தர் எனக்கு புதிதாக வெளிப்படுத்தினார் என்று யாராவது கூறினால் அது வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை. கடவுள் ஒருபோதும் மாறாதவர். அவர் தம் வேதாகமத்தில் இருப்பதற்கு மாறாக எதையும் கூறுவதில்லை. கடவுளைப் பற்றீய சரியான அறிவும் வேதாகம அடிப்படை அறிவும் இருந்தால் நாம் எத்தகைய உபதேசங்களையும் இனம் கண்டு கொள்ளலாம். இயேசு கூறியது; "உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்." (மத்தேயு 24:4).

Post a Comment

0 Comments