Ad Code

திருச்சபை என்ன செய்துக் கொண்டிருக்கிறது? போலிப் போதனைகளுக்கு எதிராக... The Role of the Church against False Teachings

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே... வாழ்த்துகள்... பரிசுத்த வேதாகமத்திற்கு மாறான பலவித போலிப் போதனைகள் என்கிற கள்ள உபதேசங்கள் மிகவும் பெருகிக் கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆதிதிருச்சபை காலம் முதலே இப்படிப்பட்ட துர் உபதேசங்கள் இருக்கிறது உண்மை. 

கேள்விகள் என்னவென்றால்.....
1. ஆதித்திருச்சபையைப் போன்று இன்றைக்கு நம்முடைய திருச்சபை எந்தவகையில் குரல் எழுப்புகிறது?
2. எத்தனை மன்றங்களை (Council) இன்றைய திருச்சபை கள்ள உபதேசங்களை சபைக்கு எடுத்துச் சொல்ல நடத்தியிருக்கிறது? 
3. எத்தனை தீர்மானங்களை (Committe Reports against false teaching) இயற்றியிருக்கிறோம்?
4. பிரசங்க பீடங்களில் இருந்து சபைக்கு இந்த கள்ள உபதேசங்களை குறித்த எச்சரிக்கை கொடுக்க தயங்குவது ஏன்?
5. எல்லாரையும் எளிதில் சென்றடையும் சமூக வலைத்தளங்கள் (WhatsApp, Facebook, YouTube etc) வாயிலாக நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்?

இந்த கள்ள போதகர்கள் நம் திருச்சபைகளை குறி வைத்து வஞ்சிக்கிறார்கள். "பராம்பரிய சபை" மற்றும் "பெந்தேகோஸ்தே சபை" என்ற அடையாளத்தைக் கொடுத்து நம்மை ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே நிலைமை சென்றால், சபைகளில் பிரசங்க பீடங்கள் எல்லாம் வேதத்திற்கு புறம்பான அனுபவ போதனைகளால் நிரம்பியிருக்க நாம் காரணமாகிவிடுவோம். மிகப்பெரிய தவறு என்னவென்றால், கள்ள உபதேசங்களை போதிக்கிறவர்களை அழைத்து நம் சபைகளில் இன்றைக்கும் பயன்படுத்தும் நிலைமை அதிகரித்து தான். கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுக்கு பிரியமான ஊழியரை அழைப்பது என்பது தவறு. யாரை அழைக்கிறோம் என்பதை விட எது சரியான சத்தியம் என்று யோசித்து செயல்பட வேண்டும். இன்றைய சபைகள் கண்டும் காணாமல் இருக்க காரணங்கள் என்ன?

சபையை வழிநடத்தும் போதக பெரும்மக்களே... பிரசங்கியார்களே... நிர்வாகத்தினரே... நாம் தைரியமாக செயல்பட வேண்டிய காலம் இது. நம் சபையின் மந்தையை ஆட்டுத் தோலை போர்த்திய ஓநாய்கள் கூட்டம் வஞ்சித்து விடாமல் காக்க வேண்டியது நம் தலையாய கடமை. அப்போஸ்தலர் யூதா சொல்லுகிறார்: "அன்பார்ந்தவர்களே, நம்மெல்லாருக்கும் கிடைத்துள்ள பொதுவான மீட்பைக் குறித்து உங்களுக்கு நான் எழுத மிகவும் ஆர்வமாய் இருந்தேன். ஆனால் எல்லாக் காலத்துக்குமென இறைமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட விசுவாசத்துக்காகப் போராடும்படி உங்களை ஊக்குவிக்க இதை எழுதும் தேவை ஏற்பட்டுள்ளது" (யூதா 1:3). இன்னும் எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே பிரசங்க பீடங்களில் அரைக்க போகிறோம்? சிந்திப்போம்... ஆண்டவர் நம் கையில் கொடுத்துள்ள சபைக்கு நாம் தான் பொறுப்பு, உத்திரவாதம் என்ற சிந்தையோடு செயல்பட ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.

Post a Comment

0 Comments