உங்களுக்குத் தெரியுமா? இன்றைக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் துர் உபதேசங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு போலிப் போதகர்களைப் பின்பற்றியவர்களால் இங்கு போதிக்கப்படுபவையாகும். "வெளிப்பாடு" என்ற பெயரில், "அதாவது கடவுள் யாருக்குமே கொடுக்காத வெளிப்பாட்டை எனக்குக் கொடுத்தார்" என்று வேதத்திற்கு புறம்பான காரியங்களை செய்யும் கூட்டம் ஆதித்திருச்சபை தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. "வெளிப்பாடு" என்ற நல்வார்த்தை இவர்களால் தவறான கோணத்திலும் பயன்படுத்தப்படுவது வருத்தமான ஒன்று. ஆகவே "போலி வெளிப்பாடு" என்று நாம் அழைக்கலாம்.
ஆதித்திருச்சபைகளில் கள்ள உபதேசங்கள் (Heresy) என்று பல கவுன்சில்கள் (Church Councils) மூலம் திருச்சபையால் நிராகரிக்கப்பட்டவற்றை, இன்றைக்கு அது தான் சரியான போதகம் என்று போதித்துக் கொண்டிருக்கிறார்கள். திருச்சபை அன்றைக்கு சரியான வெளிப்பாடு இல்லாததால் தவறு செய்துவிட்டது, எங்களுக்கு புதிய வெளிப்பாடு, சொப்பனம் கிடைத்தது என்று சொல்லி, கள்ள உபதேசங்களை துணிகரமான போதிக்கிறார்கள். அவர்களே சில ஆதித்திருச்சபையில் நிராகரிக்கப்பட்ட சிலருடைய பெயர்களை தங்கள் செய்திகளில் குறிப்பிடுவதைக் காண முடியும்.
இன்றைக்கு இந்திய கள்ள உபதேசிகள் சொல்லும் வெளிப்பாடுகளில் பல வெளிநாட்டு கள்ள உபதேசிகள் பயன்படுத்தும் உக்திகள். இதில் சில கள்ள உபதேசிகள் அரசாங்கத்தால் எச்சரிக்கப்பட்டதும் உண்டு. விசாரணையில் சிக்கிய கள்ள போதகர் குறித்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும். வேதத்தை தங்கள் சுய அனுபவங்களின் படி பேசுகிற இவர்கள் அதற்கு கொடுக்கிற பெயர் தான் வெளிப்பாடு. போலிப் போதகர்கக் தங்கள் ஆபத்தான கொள்கைகள் மற்றும் ஆன்மா-வஞ்சகங்களை மிகவும் நியாயமான பேச்சுக்கள் மற்றும் நம்பத்தகுந்த பாசாங்குகள், உயர்ந்த கருத்துக்கள் மற்றும் பொன்னான வெளிப்பாடுகளுடன் மூடிமறைத்து வண்ணம் தீட்டுகிறார்கள். இந்த நாட்களில் பலர் இதில் மயக்கமடைந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
வேதத்திலிருந்து கடவுள் வெளிப்படுத்தி விளக்கினார் என்று கூறாமல், கடவுள் எனக்கு தனியாக புதியதாக வெளிப்படுத்தினார் என்று உரைக்கும் நபர்களுக்கு மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், கடவுளின் வார்த்தைக்கான வெளிப்பாடுகள் வேதம் சார்ந்ததாக, சத்தியத்தின் அடிப்படையில் தான் இருக்கும். ஆதித்திருச்சபையின் காலத்தில், தவறான உபதேசங்களாக விலக்கப்பட்டவற்றில் இருந்தும், வெளிநாட்டில் பெருகிவரும் கள்ள உபதேசங்களைப் பின்பற்றியும், இன்றைக்குப் புதியதாக "வெளிப்பாடு" என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் போலிப் போதனைகளுக்கு செவிசாய்க்காமல் கவனமாக இருக்க ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
Acknowledgement
Meyego
0 Comments