Ad Code

இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன் | Inikkum Thamizinil Yesuvai Paaduven | Christian Tamil Songs

இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன்
இதயக் கனிவுடன் இசைமலர் தொடுப்பேன்
                                                
எளியவன் நானும் இறை புகழுரைப்பேன்
எல்லாப் பண்ணிலும் இயேசுவை இணைப்பேன்

1. மரி உபதேசிகர் மறைஞர் சாமுவேல்
    பெரியண்ணன் மற்றும் பால்மருடனே
    அரியராம் பரமானந்தர் பாடிய              
                                 - இனிக்கும்
                                
2. மறைமுதற் கலைஞரும் மீட்புக் கவிஞரும்
    குறைவில்லாப் புலவர் சந்தியாகரும்
    நிறை மொழி மாசில் மணியரும் பாடிய  
                               - இனிக்கும்
                               
3. வேதக் கண்ணரும் வீர முனிவரும்
    போதகர் வேத நாயகருடனே
    மேதை யோசேப் பண்ணலும் பாடிய        
                             - இனிக்கும்
                             
4. ஆபிராம் கலைஞரும் காபிரியேலரும்
    தாவீது ஐயர் தைரியம் எழுத்தர்
    பாவலர் பலரும் பயின்று பாடிய              
                             - இனிக்கும்

Post a Comment

0 Comments