பரிசுத்த வேதாகமம் கிறிஸ்தவர்களின் புனித நூல். அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. பழைய ஏற்பாடு யூதர்களின் புனித நூல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த பழைய ஏற்பாட்டின் எஸ்தர் புத்தகத்தின் தொடக்கமே அபூர்வமான கருத்தை உள்ளடக்கியிருக்கிறது. மேலும் எஸ்தர் 1.1 க்கு ஒத்த கருத்து எஸ்தர் 8.9 இலும் வருகிறது. அது என்ன?
நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப்பு:
இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: (எஸ்தர் 1:1).
ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு:
இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில், (எஸ்தர் 1:1).
சீகன் பால்க் மொழிபெயர்ப்பு:
சிந்துதேசம் துவக்கி எத்தியோப்பியா தேச மட்டுமிருக்கிற நூற்றிருபத்தேழு சீமைகளையாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: (எஸ்தர் 1:1)
KJV ஆங்கில மொழிபெயர்ப்பு:
Now it came to pass in the days of Ahasuerus, (this is Ahasuerus which reigned, from India even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces:) (Esther 1.1).
NRSV ஆங்கில மொழிபெயர்ப்பு:
This happened in the days of Ahasuerus, the same Ahasuerus who ruled over one hundred twenty-seven provinces from India to Ethiopia. (Esther 1.1).
எபிரெய மூலபதம்:
எபிரெய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை ( מֵהֹ֣דּוּ - mê·hōd·dū) ஹோட்டு என்பதாகும். இது அன்றைய காலத்தில் சிந்து சமவெளிப் பகுதியில் நடைமுறையில் வார்த்தை மொழியில் உள்ள வார்த்தை. (உதாரணம் தமிழ் நாடு எனும் இடப்பெயர் எல்லா மொழிகளிலும் ஒரே உச்சரிப்பில் தான் பயன்படுத்தப்படுகிறது) ஹோட்டு என்பதின் இன்றைய பயன்பாடு ஹிந்துஸ்தான் என்றும் சொல்லலாம்.
சீகன்பால்கு மொழிபெயர்ப்பில் சிந்துதேசம் என்று ஏன் வருகிறது?
திருத்தொண்டர் சீகன்பால்கு (1682 - 1719) இந்தியா என்று இன்றைய சுருங்கிய பகுதியாக "ஹோட்டு" என்ற எபிரேய பயன்பாட்டை குறிப்பிட முன்வரவில்லை. அவரது காலத்தில் சிந்துதேசம் என்ற வார்த்தை அதிகமாக நடைமுறை பழக்கத்தில் இருந்த வார்த்தை. ஆகவே அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.
இந்துதேசம் என்ற வார்த்தையை பவர் தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்த காரனம் என்ன?
பவர் மொழிபெயர்ப்பின் காலத்தில் பரந்துவிரிந்த சிந்துசமவெளி பகுதியாகிய ஹிந்துஸ்தான் என்பது இந்துதாஸ்தான் என்ற வார்த்தையாக நடைமுறையில் இருந்தது. வரலாற்றில் இந்து தேசம் என்ற வார்த்தையை பவர் தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்த ஆறுமுக நாவலரின் பங்கு இருந்ததாக வரலாறு சொல்லுகிறது.
India (இந்தியா) என்று ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வருவது ஏன்?
ஹிந்துஸ்தான் என்ற வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பாக India அதாவது ஹிந்தியா - இந்தியா என்று புரிந்துகொள்ள முடியும். இந்தியா என்ற இன்றைய சுருங்கிய பகுதியை தாம் KJV மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை. உதாரணமாக, 1947 க்கு முன்பாக பாகிஸ்தானும் இந்தியாவின் / இந்துதேசத்தின் ஒரு அங்கமே.
இந்தியா என்று ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் வருவது ஏன்?
மேற்கூறிய படியே, ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் வரும் இந்தியா என்பது நம் இந்தியா நாடுதான். ஆனால் அதன் அர்த்தம் இந்தியா 127 நாடுகளின் ஒரு புற எல்லை. மேலும் இன்றைய குமரி முதல் காஷ்மீர் வரையுள்ள சுருங்கிய இந்தியாவை எபிரேய மொழி குறிப்பதில்லை. இன்றைய நடைமுறை அடிப்படையில் புரிந்துகொள்ள இந்தியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள 127 நாடுகள் - அதாவது இந்தியா தான் ஒருபுறத்தின் எல்லைப்பகுதி என்பதை வைத்து இந்தியா என்று மொழிபெயர்க்கபட்டுள்ளது.
வேதத்தில் இந்து தேசம் / சிந்து தேசம்/ இந்தியா எதைக் குறிக்கிறது?
சிந்து தேசம் / இந்துதேசம் என்று அன்றைக்கு அறியப்பட்ட பகுதி, இன்றைய ஆசியா கண்டத்திலுள்ள பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கிய பெரும்பகுதியாகும். இன்றைய இந்தியா தான், அதில் எல்லையாக, முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆகவே தான் "இந்தியா" என்ற வார்த்தை இன்றும் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. வேதாகமம் எழுதப்பட்ட பின்னணி மற்றும் காலத்தின் அடிப்படையில் இடப்பெயரை ஆராய்வது சரியான வழிமுறையாகும். மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளின் அடிப்படையில் 127 நாடுகள் என்ற எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப் பகுதியின் அங்கம் என்பது நமக்கு பெருமை.
ஆகாஸ்வேரு இந்தியாவை ஆண்டது உண்மையா?
ஆம். முற்றிலும் உண்மை. திரு. ராஜிவ் சிங் என்ற இந்தியர் எழுதிய நூலான “THE PERSIAN INVASION OF INDIA” BY RAJIV SINGH (CATEGORY: “HISTORY OF ANCIENT INDIA”) இதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கிறது. ஆகாஸ்வேரு பெர்சியா ராஜா என்பது உண்மையே.
இந்தியா / இந்துதேசம் இந்துமதம் சார்ந்த நாடா?
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதலில் ஹிந்துதேசம், பின்னர் இந்துதேசம் என்று அறிப்பட்ட சிந்து சமெளி பகுதி ஒரு குறிப்பிட்ட மதத்ததை சார்ந்த பகுதியல்ல. பலத்தரபட்ட மத நம்பிக்கை கொண்ட மக்கள் வாழ்ந்த பகுதி. அந்தந்த நாடுகள் தனி சுதந்திரம் பெற்ற பின் பெரும்பாலும் மத ரீதியான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவது உண்மை. அதை வைத்து இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்தார்கள் என்று வரலாற்றை மறைப்பது தவறு. அப்படி பார்த்தால், பாகிஸ்தான் பகுதியில் முஸ்லிம் மக்கள் மட்டுமே வாழ்ந்தார்கள் என்று சொல்வதையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். மதத்தின் அடிப்படையில் நாடுகள் பிரிக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நிறைவாக....
கிறிஸ்தவர்களின் புனித நூலான பரிசுத்த வேதாகமம் வரலாற்றோடு தொடர்புடைய நூல், ஒத்துப்போகக் கூடிய நூல் என்பது மாறாத உண்மை.
Acknowledgement
Meyego (மேயேகோ)
0 Comments