Ad Code

ஐத்திகு • Eutychus • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 104
ஐத்திகு: ஆவிக்குரிய விழிப்புணர்வு

1. பெயர்:  
ஐத்திகு • Eutychus

2. அர்த்தம்: 
நல்வாய்ப்புள்ளவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 20:7-12 சுருக்கம்:
பவுல் துரோவா பட்டணத்தில் இரவு வெகுநேரம் வரை பிரசங்கித்தபோது, ஐத்திகு என்ற வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து தூக்கக் கலக்கத்தால் மூன்றாம் மேலறையிலிருந்து கீழே விழுந்து இறந்துபோனான். பவுல் கீழே இறங்கி அவனை கட்டியணைத்து, ஜெபித்து மீண்டும் உயிரோடே எழுப்பினான்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• வாலிபன்: 'நெயானியாஸ்' (Neanias) என்ற கிரேக்கச் சொல்லின்படி, ஐத்திகு 14-20 வயதுக்குட்பட்ட வாலிபன்.
• கிரேக்க-ரோமானிய வரலாற்றில் 'ஐத்திகு' (Eutychus) என்ற பெயர் பொதுவாக அடிமைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கே அதிகம் சூட்டப்பட்டது. இதனால் அவன் ஒரு ஏழை ஆலைத் தொழிலாளியாகவோ அல்லது அடிமையாகவோ இருந்திருக்க வாய்ப்புள்ளது.
• சோர்வு & சூழல்: நாள் முழுதும் வேலை செய்துவிட்டு இரவுக்கூட்டத்திற்கு வந்தவன், விளக்குகளின் புகை, வெப்பம் மற்றும் நீண்ட பிரசங்கத்தால் ஆழ்ந்த தூக்கத்திற்குள்ளானான்.
• அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதிய லூக்கா ஒரு மருத்துவர். அவர் ஐத்திகுவைக் குறிக்கும்போது அவன் "செத்தவனாய் எடுக்கப்பட்டான்" (Arthe nekros) எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இது வெறும் மயக்கமல்ல, நிஜமான மரணம் என்பதை மருத்துவக் கோணத்தில் உறுதிப்படுத்துகிறது.
• அற்புதம்: மேலறையிலிருந்து விழுந்து இறந்தவனை, பவுல் மூலம் தேவன் மீண்டும் உயிரோடு எழுப்பி விசுவாசிகளுக்கு ஆறுதல் அளித்தார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
கடவுளுடைய வார்த்தையைக் கேட்கும்போது கவனச்சிதறல்களுக்கோ அல்லது அலட்சியமான இடங்களுக்கோ (ஆபத்தான பலகணி/ஜன்னல்) இடம் கொடுக்கக்கூடாது. ஆவிக்குரிய தூக்கம் நம்மை வீழ்ச்சிக்கு நேராக நடத்தும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments