Ad Code

சாமுவேல் வேதநாயகம் பிள்ளை | Samuel Vethanayagam Pillai

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார்.

இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்க் கவிதைகளின் புதிய பாணிக்கு வேதநாயகம் பிள்ளை வித்திட்டார் என்றால் அது மிகையில்லை. இவர், வீணை வாசிப்பதிலும் வல்லவர். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62வது வயதில் 1889 ஆம் ஆண்டு மறைந்தார்.

Post a Comment

0 Comments