Ad Code

தூய சேவியர் தமிழ் ஆலயம், கல்கத்தா | St. Saviour's Tamil Church • First Tamil Church in Calcutta

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் தமிழ் தேவாலயம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிழக்கு இந்தியாவிலேயே முதல் தமிழ் ஆலயம் (First Tamil Church in East India) கல்கத்தா பட்டணத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் வட இந்திய திருச்சபை கல்கத்தா திருமண்டத்தின் (CNI Diocese of Calcutta) கட்டுப்பாட்டில் உள்ளது.

பழமையான ஆலயம் 1849 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடக்கத்தில் பெங்காலி மொழியில் மட்டும் தான் ஆராதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது. தூய ஜார்ஜ் ஆலயத்திற்கு பெங்காலி சபையார் மாறி செல்ல, 1860 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் இங்கு தமிழ் மொழியில் ஆராதனை நடத்த ஆரம்பித்தனர். ஆனால், சில பெங்காலி சபையார் அங்கு செல்லாததால், 1938 ஆம் ஆண்டு வரை பெங்காலி ஆராதனையும் நடத்தப்பட்டு இருக்கிறது.
தேவாலய கட்டிடத்தின் மேல்-கூரை 1961 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, டிசம்பர் 17 ஆம் தேதி மதிப்பிற்குரிய பேராயர் முனைவர். ஏ.என். முகர்ஜியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு முதல் ஞானஸ்நானம் 1968 ஆம் ஆண்டில் பிஷப் கல்லூரியின் முதல்வரால் கொடுக்கப்பட்டது. கனம். தாமஸ் சித்தர் அவர்கள் தான் இந்த சபையின் முதல் கௌரவ தமிழ் பாதிரியார் ஆவார். 

தேவாலயம் இயேசுவின் திருநாமத்தின் மறைபொருளான இரட்சகர் என்ற பெயரைக் கொண்டுள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி புரவலர் விழாவாக (Patronal Festival) ஆசரிக்கப்படுகிறது. மேலும் நவம்பர் மாதம் முதல் ஞாயிறு அறுவடைப் பண்டிகை (Harvest Festival) கொண்டாடப்படுகிறது. 
தற்பொழுது, இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு ஆராதனைகள் நடக்கிறது, காலை 8.30 மணிக்கு முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு ஆங்கில ஆராதனையும், இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு தமிழ் ஆராதனையும் நடைபெறுகிறது. எல்லா வாரமும் காலை 10.30 மணிக்கு இந்தி ஆராதனை நடைபெறுகிறது. 

ஆலயத்தின் இணையதளம்: http://cnicalcutta.org/church_st_saviours_church.html

ஆலயத்தின் தொடர்பு முகவரி
          8, Alimuddin St, Jora Girja, 
          Janbazar, Taltala, Kolkata, 
          West Bengal - 700016

ஆலயத்திற்கு செல்ல வழி:

Post a Comment

0 Comments