இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று திருவருகை காலத்திற்குள் காலடி வைக்கிறோம். இக்காலம், இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம். "மனிதனே உனக்கான ஒளி தோன்றி உள்ளது. ஆண்டவரின் மாட்சிமை உன் மீது உதித்துள்ளது" என்பதை உணர்த்த கிறிஸ்துமஸ் முன்தயாரிப்புகளில் ஐந்து வகையான மெழுகுவர்த்திகள் தேவாலயங்களில் ஏற்றப்படும் நிகழ்வு முக்கியத் துவம் பெறுகிறது. அப்போது திருச்சபை இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் மன்றாட்டுகள் சொல்லப்படும்.
முதல் வாரம் - எதிர்நோக்கு
முதலாவது எதிர்நோக்கின் மெழுகுவத்தி (Candle of Hope). இது மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை குறிக்கின்றது.
இரண்டாம் வாரம் - அமைதி
இரண்டாவது அமைதியின் மெழுகுவத்தி (Candle of Peace). மீட்பரின் வருகை, வரும் காலம்,அவரின் இயல்புகள் போன்ற அனைத்து செய்திகளையும் தந்த இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, தானியேல் போன்றோரை குறிக்கின்றது. அட்வெந்து என்பது என்ன? click here to read
மூன்றாவது வாரம் - மகிழ்ச்சி
மூன்றாவது மகிழ்ச்சியின் மெழுகுவத்தி (Candle of Joy). இது மீட்பரின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானை குறிக்கின்றது.
நான்காவது வாரம் - அன்பு
நான்காவது அன்பின் மெழுகுவர்த்தி (Candle of Love). அன்னை மரியாவையும அவர் கணவர் புனித யோசேப்பையும் குறிக்கின்றது.
கிறிஸ்து மெழுகுவர்த்தி (Christ Candle)
கிறிஸ்துவின் பிறப்பை தெரிவிக்க ஐந்தாவதாக வெள்ளை நிற மெழுகுவர்த்தியும் ஏற்றப்படுகிறது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே...
கடவுளின் வருகையின் போது நாம் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.அதை நிறைவேற்றுவதே கடவுளின் மக்களாகிய நமது கடமை. இத்திருவருகைக் காலத்தில் கடமையைச் செய்வோம் கடவுளின் அருள் பெறுவோம்!
0 Comments