அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஜே.சி. பென்னி (J.C. Penney). ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபர். உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டபொழுது, அவர் சிறிதும் தாமதியாமல், “இயேசு கிறிஸ்து மற்றும் துன்பம். இவைதான் என்னுடைய வெற்றிக்குக் காரணங்கள்” என்றார்.
கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்” என்று செய்தியாளர் மீண்டுமாக அவரிடத்தில் கேள்வியைக் கேட்டபொழுது, அவர் மிகவும் நிதானமாக, “பலர் தங்களுடைய வாழ்க்கையில் துன்பமே வரக்கூடாது என்று நினைப்பார்கள்; ஆனால், நான் என்னுடைய வாழ்க்கையில் துன்பம் வரும்பொழுது கவலைப்பட மாட்டேன். ஏனெனில் இயேசு கிறிஸ்து எனக்குத் துணையாக இருக்கின்றார்.
ஆகவே, நான் அவர்மீது நம்பிக்கை வைத்துத் துன்பங்களையும், வாழ்க்கையில் வருகின்ற சவால்களையும் துணிவோடு எதிர்கொள்வேன். அதனால் யாவும் வெற்றியாக அமைந்துவிடும். ஆகவேதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம் துன்பமும் இயேசு கிறிஸ்துவும் என்று சொல்கின்றேன்” என்றார்.
ஜே.சி. பென்னி தன்னுடைய வாழ்வில் துன்பம் வந்தபொழுது, இயேசு கிறிஸ்துவின் மீதே நம்பிக்கை கொண்டார். அதனாலேயே அவரால் வெற்றியாளராய் வலம்வர முடிந்தது. ஆம் துன்பங்கள் தடைக் கற்கள் அல்ல... படிக்கற்கள் என எண்ணி நம் கடவுளை நம்பி பயணிப்போம்... வெல்வோம்
0 Comments