Ad Code

உலக ஞாயிறு பள்ளி தினம் | World Sunday School Day | November First Sunday

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக ஞாயிறு பள்ளி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்"(மத்தேயு 19.14) என்ற இயேசுகிறிஸ்துவின் திருவார்த்தைக்கேற்ப ஞாயிறு பள்ளியானது, சிறு பிள்ளைகளை இறையரசின் சாட்சிகளாக உருவாக்கும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது.

ஆங்கில எழுத்தாளர் மற்றும் வெளியீட்டாளரான ராபர்ட் ரைக்ஸ் (Robert Raikes 1735-1811) 1780 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள க்ளூசெஸ்டர் நகரில் (Gloucester in England) முதல் ஞாயிறு பள்ளியைத் தொடங்கினார். ஆரம்ப நாட்களில், ஞாயிறு பள்ளியில் வாசிப்பு பயிற்சி மற்றும் வேதாகமம் கற்பிக்கப்பட்டது. இன்று வரை இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நம் பிள்ளைகளை ஒழுங்காக ஞாயிறு பள்ளிக்கு அனுப்பவதும், ஞாயிறு பள்ளி ஊழியத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதும், மற்றும் நம்மால் இயன்றதை இவ்வூழிய பணிகளுக்காக கொடுப்பதும் நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

உலகம் முழுவதும் திருச்சபைகளில் குழந்தைகள், ஞாயிறு பள்ளியை நேசிக்கவும், அதன் மூலம் ஆண்டவருடைய அன்பை அறிந்து கொள்ளவும், அதில் தன்னார்வமாக பணியாற்றுகின்ற ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்காகவும், ஞாயிறு பள்ளி இல்லாத இடங்களில், ஞாயிறு பள்ளி உருவாக்கப்பட பாரத்தோடு இறை வேண்டல் செய்வது மிகவும் அவசியமானது.

Post a Comment

0 Comments