காதல் வாலிப காதல்
உன் காலை வாரிவிடும் காதல்
கர்த்தர் மேல் வைத்திடும் காதல்
உன்னைக் காலுன்ற வைத்திடும் காதல்
பருவத்தின் காதல் இனி
நெவர் நெவர் (Never)
பரிசுத்த காதல் தான்
பவர் பவர் (Power)
ஐ லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ
(I love You Jesus I love You)
பஸ் ஸ்டாண்ட் பார்க் பீச்சு தியட்டரில்
கைகோர்த்து நிற்பது தான் காதலா?
தாய் தந்தை பேச்சு நீயும் தட்டி விட்டு
தறி கெட்டு ஓடுவது காதலா?
உனக்காக பூத்திருக்கும் சாரோன் ரோஜா - அவர்
உன்னைத் தினம் காதலிக்கும் இயேசு ராஜா
மனுஷிக காதல் ஒரு
ஃபீவர் ஃபீவர் (Fever)
அதன் மாய்மாலம் எல்லாம் இனி
ஓவர் ஓவர் (Over)
ஐ லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ
(I love You Jesus I love You)
சினிமாவில் காட்டும் காதல் காட்சிகள்
உன் சிந்தனையை செல்லரிக்கும் பூச்சிகள்
தாடி வளர்த்து தண்ணியடிக்கும் சோகங்கள்
காதல் தோல்வி தற்கொலை எல்லாம் சாபங்கள்
காதல் சின்னம் எல்லாம் கல்லறைக் கண்காட்சி - அந்தக்
கல்வாரி காதல் தான் இரத்த சாட்சி
காதல் தோல்வி எல்லாம் இனி
நெவர் நெவர் (Never)
அட கர்த்தருக்குள் வந்து விட்டால் இனி
பவர் பவர் (Power)
ஐ லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ
(I love You Jesus I love You)
காலேஜ் கம்யூட்டர் செண்டரில்
காதல் வலையில் சிக்கிக்கொள்ள கூடாது
கைகோர்த்து கர்த்தர் முன்பு சேரும் வரை
காவல் நிலையக் கல்யாணங்கள் கூடாது
காதல் என்ற கண்ணி வலையில் சிக்காதே - பின்பு
கர்த்தர் முன்னால் கண்ணீர் சிந்தி நிக்காதே
இண்டர்நெட்டு காதல் எல்லாம்
நெவர் நெவர் (Never)
இயேசு வைத்த காதல் தான்
பவர் பவர் (Power)
ஐ லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ
(I love You Jesus I love You)
காதல் வாலிப காதல்
உன் காலை வாரிவிடும் காதல்
கர்த்தர் மேல் வைத்திடும் காதல்
உன்னை காலுன்ற வைத்திடும் காதல்
பருவத்தின் காதல் இனி
நெவர் நெவர் (Never)
பரிசுத்த காதல் தான்
பவர் பவர் (Power)
ஐ லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ
(I love You Jesus I love You)
Acknowledgement
Voice by Mrs. Manoroma
Unknown Author
0 Comments