இந்தியாவில் நவம்பர் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஒன்றிப்பு ஞாயிறு (Unity Sunday - ஐக்கியத்தின் ஞாயிறு / ஒருமைப்பாட்டு ஞாயிறு) இந்திய சபைகளின் ஐக்கியம் என்ற கூட்டமைப்பின் வாயிலாக ஆசரிக்கப்படுகிறது. இது சி.சி. ஐ ஞாயிறு (CCI Sunday) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திய சபைகளின் ஐக்கியம் (CCI - Communion of Churches in India) என்பது இந்தியாவில் உள்ள மூன்று பிரதான சீர்திருத்த திருச்சபைகளான வட இந்திய திருச்சபை (CNI), தென் இந்திய திருச்சபை (CSI) மற்றும் மலங்கரா மார்தோமா சிரியன் திருச்சபை (MTC) ஆகியவற்றின் கூட்டமைப்பாகும்.
இதன் வாயிலாக உள்ளூர் திருச்சபைகள் கூட்டு சேவைகளை நடத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
The second Sunday in November is set apart as Unity Sunday in all churches to celebrate the unity that has been already attained, and local parishes are encouraged to conduct joint services. The Communion of Churches in India (CCI) is a representative body of three mainland Protestant Churches in India: the Church of North India (CNI), the Church of South India (CSI) and the Malankara Mar Thoma Syrian Church (MTC). To read more about CCI click here.
0 Comments