Ad Code

ஓரினச் சேர்க்கை பாவமா? வேதாகமம் என்ன சொல்லுகிறது? | Biblical View on Homosexuality

ஓரினச்சேர்க்கைச் செயல் குறித்து ஒரே கருத்தையே வேதாகமம் சொல்லுகிறது (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9 ; 1 தீமோத்தேயு 1.10). 

ஓரினச்சேர்க்கை கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் செயலாகவே கருதப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் வேலியராகமம் புத்தகத்தில் இதனை வன்மையாக கண்டிக்கிறார் (லேவி 18.22). மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது, கர்த்தரைவிட்டு பிரிந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றதும் நம்பிக்கையற்றதுமாகிறது என்பதை குறித்து ரோமர் 1:26-27 விளக்குகிறது. எல்லாப் பாவமும் கடவுளுக்கு விரோதமானதுதான். "What the Bible does say clearly is that to perform same sex acts—to engage in homosexual practice or behavior—is sin." 

மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறுவதற்கு பாவமும் அவர்களது சொந்த விருப்பமும் தேர்வுமுமே இறுதியான காரணங்கள் என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 1:24-27). மனிதர் பாவ இச்சைகளுக்கு இடம் கொடுத்து பாவம் செய்ய விளைவதை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதர் பிறக்கும்பொழுதே மூர்க்கம்/கோபக் குணமுடையவராக இருந்தது பின்பு அவர் அந்த குணங்களுக்கு அடிமைபடுவது சரி என்றாக்கிவிடுமா? இல்லவே இல்லை. "Homosexual attraction is an attraction to something God has forbidden, and any desire for something sinful ultimately has its roots in sin."

1 கொரிந்தியர் 6:9-10-ல் பட்டியலிடப்படும் தேவனுடைய ராஜ்யத்தை விட்டு மனிதனைப் பிரிக்கும் பல காரியங்களில் ஒன்றுதான் ஓரினச்சேர்க்கை. ஓரினச்சேர்க்கைப் பாவம் செய்தவர்கள் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. "தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், "ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்," திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை" (1 கொரிந்தியர் 6:9-10).

ஒரு விபச்சாரிகளுக்க்கும், விக்கிரகாராதனைக்காரருக்கும், கொலைகாரருக்கும், திருடர் போன்றவர்க்கும் தேவனுடைய மன்னிப்பு உண்டு. அப்படியே ஓரினச்சேர்க்கையாளருக்கும் அவர்கள் அப்பாவத்தை விட்டு மனம் திரும்பும் போது மன்னிப்பு உண்டு என்று வேதாகமம் கூறுகிறது.
பாவத்தின்மேல் ஜெயத்திற்காக அளிக்கப்படும் பெலனை, இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசங்கொள்ளுகிறவர்கள் யாவருக்கும் கடவுள் வாக்குத்தத்தம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 கொரிந்தியர் 5.17; பிலிப்பியர் 4:13). "உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்" (1 கொரிந்தியர் 6:11).

இன்றைய கால கட்டத்தின் ரோமன் கத்தோலிக்க போப் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சார்பாக, அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனும் வகையில் என்ற செய்தியும் பரவி வருகிறது. இதை வைத்துக் கொண்டு நாம் ஓரினச் சேர்க்கை எனும் விடயத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. சில. நாடுகளின் சட்டமும், நீதிமன்ற தீர்ப்புகளும் இதனை அனுமதிப்பதாக இருக்கலாம். போப்பின் வாக்கும், உலக சட்டமும் என்றும் வேதவாக்காகி விட முடியாது. ஓரினச் சேர்க்கை செய்பவர்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் அவர்களின் அந்த பாவத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதன்படி ஓரினச் சேர்க்கை என்பது பாவம் பாவம் பாவமே. அப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி, பாவத்தை விட்டுவிட்டு கடவுளுக்கு பிரியமாக வாழ்வதே இறை சித்தமாகும்.  

Post a Comment

0 Comments