இராகம்: ஆண்டவரின் தோட்டம்
ஆண்டவரின் பிறப்பு, அழகுதூதர் கூட்டம்
ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது;
அன்புபொங்கும் உள்ளம், அருள்வசந்த இல்லம்
ஆண்டவரைப் புகழச் சொல்லுது.
தேவ ஜீவ ராகம் பிறந்திட,
ஜோதிரூபம் நாளும் முழங்கிட, ஆடிபாடுவோம்
வையகமே வானகமே விண்ணொளிரும் மீனினமே
சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்.
ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது;
அன்புபொங்கும் உள்ளம், அருள்வசந்த இல்லம்
ஆண்டவரைப் புகழச் சொல்லுது.
தேவ ஜீவ ராகம் பிறந்திட,
ஜோதிரூபம் நாளும் முழங்கிட, ஆடிபாடுவோம்
வையகமே வானகமே விண்ணொளிரும் மீனினமே
சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்.
1.ஆற்கலே அருவிகளே வாருங்கள் - நங்கு
ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
நானிலமே நவமணியே கூடுங்கள் - நம்
பாலகனாம் இயேசுவையே போற்றுங்கள்.
2.மானினமே மீனினமே நில்லுங்கள் - நல்
மலைமுகிலே மலர்குலமே கேளுங்கள்
பறவைகளே கறவைகளே வாருங்கள் - நம்
பாலகனின் எளிமையையே பாருங்கள்
3.பாலகரே வாலிபரே நினையுங்கள் - நம்
பிதாஈந்த இயேசுவையே பாடுங்கள்
ஆடவரே மகளிரே வாருங்களோ - நம்
ஆண்டவருக்கு இதயத்தையே தாருங்கள்.
0 Comments