இராகம்: நல்லநாள் இது ஒரு நல்லநாள்
நல்லநாள் இது ஒரு நல்லநாள்
நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திருநாள்
நல்லநாள் இதுஒரு நல்லநாள் - ஆஹாஹா
நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திருநாள்
நல்லநாள் இதுஒரு நல்லநாள் - ஆஹாஹா
1.சொல்லி முடியாத எண்ணில் அடங்காத
நன்மைகள் பலவும் செய்திட
தேவன் கண்ணின்மணிபோல் உள்ள இயேசுவை
நம்மையும் மீட்டிட அனுப்பினார்
2.ஆடிமகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பையும் போற்றுவோம்
பாலன் இன்று நம்மிலேபிறக்க உண்மையாய்
மனதில் அவரையே வாழ்த்துவோம்.
3.ஒன்று பத்தாக பத்து நூறாகப்
பெருகிட, அருளிச் செய்திட
தேவன் கரத்தில் நம்மையே அளித்து உண்மையாய்'
அன்புடன் அவரையே போற்றுவோம்.
0 Comments