இராகம்: ஏழைக்குப் பங்காளனாம் .....
ஏழைக்குப் பங்காளனாம் பாவிக்கு இரட்சகனாம்
இயேசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவனாம்
ஏழைக்குப் பங்காளனாம்.......
இயேசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவனாம்
ஏழைக்குப் பங்காளனாம்.......
1.மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்
மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா
அந்திவானம் சிவக்குதம்மா அல்லிமலர் சிரிக்குதம்மா
ஆண்டவனாம் இயேசுபிரான் அன்பு மனம் மணக்குதம்மா
2.காணிக்கை கொண்டுவந்து முதற்தலைவன் இயேசுவுக்கு
முன்னணை மீதினிலே வாழ்த்து பெற வைத்தனரே
உயிர் மரித்தெழ வந்த உத்தமரே இயேசுஐயா
நீரின்றி உலகத்திலே நீதிதெய்வம் வேறு உண்டோ?
0 Comments