Ad Code

கிறிஸ்மஸ் பவனியிது பாசமாய் வாரும் Christmas Pavaniyithu Paasamay Vaarum Meyego Christmas Song

இராகம்: பாலர் ஞாயிறது பாசமாய் வாரும்

கிறிஸ்மஸ் பவனியிது பாசமாய் வாரும் 
பாடி இயேசுநாமம் பணிந்து போற்றும்

தாலந்தைப் புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த ஸ்வாமி இயேசு அன்பை எண்ணி

1.பாலன் பிறப்பினாலே இரட்சிப்பைப் பெற்றோம்
பாலன் இயேசு பாதம் பணிய செல்வோம்
பாரில் ஜோதி வீசிடவே பரிசுத்த தேவன் வந்தார்
பாரில் வந்த பாலனை ஏகமாகத் துதித்துக் கொண்டு

2.ஆடி வந்தலையும் தாத்தாவுமுண்டு
பாடி ஆர்ப்பரிக்க கிறிஸ்மஸ் பாட்டுண்டு
கூடிவந்து ஆனந்திக்க வீட்டுஜெபம் செய்வதுண்டு
ஆடி எங்கும் வரும் தாத்தா இனிப்புகள் தருவதுண்டு

3. அன்பின் வருகையாலே ஆசீரும் பெற்றோம்
இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே
அன்பின்பவனி இதைக்கொண்டு ஆத்மநேசரை சொல்லிவரும்
ஊரில்எங்கும் நம்பஞ்சாங்கம் ஓதும்பாடல் சப்தம் கேட்போம்.

Post a Comment

0 Comments