Ad Code

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கூறுவோம் Yesu Christhuvin Pirappai Kuruvom Meyego Christmas Song

இராகம்: இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்...

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கூறுவோம்
தாத்தா பவனியில் முன் நடப்போம்
இனியெல்லாருமே இயேசுபணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

 நம் இயேசுராஜாவே இப்பூவில் பிறந்தாரே
 அதி வேகமாய் கூறிடுவோம்.

1. மனிதர் யாரிடமும் பாசம் காட்டவே
இயேசு தாழ்மையாய் பிறந்திட்டாரே
அதி உற்சாகமாய், அதி சீக்கிரமாய்
அவர் அன்பினைக் கூறிடுவோம்

2.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடவே
சாபக் கேட்டுக்குள் பிறந்திட்டாரே
இந்தப்பார் இயேசு பிறப்பினையே
பாடல் பாடியே எடுத்துரைப்போம்

3.இயேசுகிறிஸ்துவின் நல்பாலராகுவோம்
அவர் பாதையில் நடந்திடுவோம்
இனியெல்லாருமே அவர் வருகைக்காய்
ஒன்றாய் எந்நாளும் தயாராகுவோம்.

Post a Comment

0 Comments