1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறி. பிற. திரு. பின்வரும் 3-ம் ஞாயிறு
தேதி: 11/01/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: யாத். 3:1-15
நிருப வாக்கியம்: கலா. 3:23-4:7
நற்செய்தி பகுதி: மத். 3:11-17
சங்கீதம்: 98
2. திருவசனம்
தலைப்பு: இயேசு அடையாளப்படுத்தும் ஞானஸ்நானம்
இருப்பிடம்: கலாத்தியர் 3:27
திருவசனம்:
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
(பவர் திருப்புதல்)
அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
(திருவிவிலியம்)
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
இந் நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ஆவார் 1:1 & 5:2.
அவையோர்:
பவுலின் முதல் மிஷினரி பயணத்தில் இரட்சிக்கப்பட்ட தென் கலாத்திய சபை விசுவாசிகளுக்கு இந்த நிருபத்தை எழுதுகிறார்.
வசன பின்னணி:
புற ஜாதியிலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வருவோர் இரட்சிக்கப்பட வேண்டுமாயின் நியாயப்பிரமாண கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற கருத்தை உடைய யூத ஜனங்களை தெளிவுபடுத்தும்படியாக பவுல் அப்போஸ்தலன் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தையும் மற்றும் நியாயப்பிரமாணமில்லாமல் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஆபிரகாமின் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கும் மற்றும் உரிமைச் சொத்திற்கும் பிற இனத்தவர்களும் வாரிசுகளாக (heir) மாறுகிறார்கள் (apart from the law) என்பதை தெளிவுபடுத்துகிறார்.
5. திருவசன விளக்கவுரை
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் கலாத்தியர் 3: 15 -29ல் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட நோக்கத்தையும், ஆபிரகாமின் உடன்படிக்கையும் குறித்தும் தெளிவுபடுத்துகிறார். நியாயப்பிரமாணம் ஆபிரகாம் மூலம் வரக்கூடிய உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை (inheritance -உரிமைச் சொத்து) ரத்து செய்ய முடியாது(v. 17). இந்த உரிமை சொத்தை ஆண்டவர் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் (singular offspring, not to corporate Israel) வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார் (v. 16). அந்த சந்ததி யாரென்றால் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து. எனவே, ஆபிரகாமின் உடன்படிக்கையை சீனாய் மலையில் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் ஒழித்துக் கட்ட முடியாது. இஸ்ரவேல் ஜனங்கள் வரம்பு மீறி சென்றதால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வருகிற வரைக்கும் இஸ்ரவேல் ஜனங்களை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தும் மேற்பார்வையாளராக (supervisory & disciplinarian) இருந்தது (v. 24).
எனவே, பவுல் அப்போஸ்தலன் v. 27-ல் ஆபிரகாம் மூலம் வரக்கூடிய உடன்படிக்கையின் உரிமை சொத்து இயேசு கிறிஸ்துவை(offspring or heir) சார்ந்திருப்பதால், இயேசு கிறிஸ்து அடையாளப்படுத்தும் ஞானஸ்நானத்தின் மூலம் அவருக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவை தரித்து கொண்டிருக்கிறவர்கள் ஆபிரகாமின் சந்ததியினராகவும் மற்றும் ஆபிரகாமின் உரிமை சொத்திற்கு(inheritance) வாரிசுகளாகவும் (heirs) மாறுகிறார்கள் (v. 27& 29) அவர்களுக்குள்ளாக எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதை v. 28-ல் குறிப்பிடுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
யூதர்கள் ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்கள் தங்களுக்கு மாத்திரமே உரியது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்ல மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலம் தான் ஒரு மனிதன் இரட்சிப்படைய முடியும் என்பதை அதிகமாக வலியுறுத்தினார்கள். எனவே யூதர்கள் பிற இனத்தவர்களை ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு பாத்திரராக கருதவில்லை.
ஆனால் இயேசு கிறிஸ்து ஆபிரகாமுடைய சந்ததியில் வருவதால் அவர் மூலம் அவருக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எந்த இனத்தவராயிருந்தாலும் நியாயப்பிரமாணமில்லாமல் கிருபையின் மூலம் ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு உரிமையுடையவர்களாக மாறுகிறார்கள். கிருபையின் பிரமாணத்தில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு இல்லை கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் எல்லாவுமாக இருக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
1. இறை ஒன்றிப்பின் அடையாளம்
2. சபை ஒன்றிப்பின் அடையாளம்
3. விண்ணக ஒன்றிப்பின் அடையாளம்
எழுதியவர்
திரு. தா. ரெபின் ஆஸ்டின்
சேகர சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி.

0 Comments