Ad Code

பாலனைப் பார்க்க நீ வா Baalanai Paarkka Nee Vaa Meyego Christmas Song

இராகம்: கர்த்தரின் பந்தியில் வா....

பாலனைப் பார்க்க நீ வா - சகோதரா
பாலனைப் பார்க்க நீ வா

தந்தை அன்பாய் சொந்த குமாரனை அனுப்பின
காரணத்தை மனப் பூரண்மாய் எண்ணி

1. மாட்டுத் தொழுவிலல்லோ - கிறிஸ்துவின்
மனித அவதாரமே
மேய்ப்பருன் சென்றனரே - நமக்காய்
பிறந்  தாரன்றோ?
தேவகுமாரனின் சின்னமுகத்தை நீ
கண்டு அவரையே என்றும் துதித்திட

2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்
ஏழைக் கோலம் பாரு
ஞானியர் சென்றனரே - காணிக்கை
வைத்துப் போற்ற;
தன்னையே தந்த அவருக்காய் உன்னை
படைத்திடவே  இன்றே நீ வாராயோ?

3.அன்பின் பிறப்பாமே - கிறிஸ்துவின்
ஐக்கிய கிரியையாமே
துன்பம் துயர் போமே - இதயத்தில்
தூயர் பிறந்ததாலே
இன்பம்மிகும் தேவ அன்பின் பிறப்பினைக்
காண தாமதமும் இல்லாதிப் போதே வா.

Post a Comment

0 Comments