1. யாருக்கும் கிடைக்காத வெளிப்பாடு தங்களுக்கு கிடைத்ததாக எண்ணி தேவனுடைய சபைகளிலிருந்து தன்னை / தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். நாங்கள் தான் மணவாட்டி சபை என்றும் நினைப்பார்கள்.
2. எழுதப்பட்டவசனத்தைவிட சொல்லப்படும் வசனத்தை அதிகமாக விரும்புவார்கள். வேதத்தில் எழுதப்படாததை சொன்னாலும், கர்த்தர் சொல்லுகிறார் என்று பிரசங்கி சொன்னவுடன் அதில் மகிழ்வார்கள்.
3.சொப்பனம், தரிசனம், சத்தங்கள் இவற்றில் அதிக அக்கறை காட்டுவார்கள். நூதனகாரியங்களில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.
4. ஒருபுறம் சாய்ந்தவனாக இருப்பார்கள் .முழு வேதமும் என்ன சொல்கிறதென்பதை பாராமல் ஒரு உபதேசத்தை பிடித்துவைத்துக்கொண்டு அதுதான் சரியென்று இருப்பார்கள்.
5. பக்குவப்பட்ட மற்ற வேத போதகர்களின் ஆலோசனைகளை நாடுவதில்லை. முதிர்சியடைந்த கண்கானிகளின் கீழ் இருந்து வழிநடத்தப்பட விரும்பமாட்டார்கள்.
6. மறைவான இரகசியமான வேதசத்தியங்களில் அதிக பிரியம் காட்டுவார்கள். கேட்டால் நாங்கள் வேதத்தை ஆழமாக அறிகிறோம் என்று சொல்லுவார்கள்.
7. மிஷனரி பணியிலும் சுவிசேஷம் அறிவிப்பதிலும் அவர்களது ஈடுபாடு தனிந்து காணப்படும்.
8. யாராவது தவறை சுட்டிக்காண்பித்தால் அதை நல்மனதுடன் ஏற்கமாட்டார்கள்.
9. தங்கள் வாழ்க்கையிலுள்ள பாவங்களுக்கு ஏதோ சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அந்த தவறை செய்தால் அதை சாடும் அவர்கள், தங்களிடத்தில் அந்த செயல் இருந்தால் அது சுபாவம் அல்லது பழக்கம் என்று வாதிடுவார்கள்.
10. தாங்கள் வஞ்சிக்கபட்டுள்ளோம் என்று அவர்களுக்கு தெரியாது யாரும் சொன்னாலும் அவர்களுக்கு விளங்காது. அவர்களுக்கு கிடைக்கும் வெற்றிகள் அவர்கள் கண்களை குருடாக்கிவிடுகின்றது.
இவை யாவும் வஞ்சித்தலின் அடையாளங்கள் ஆகும். ஆகவே மிகவும் கவனமாக இருப்போம். விழிப்புடன் இருப்போம்.
0 Comments