இந்தியாவில் ஆங்கில கல்வி முறையை அறிமுகம் செய்த அலெக்ஸாண்டர் டஃப் (1806-1878) என்ற ஸ்காட்லாந்து மிஷனரியைக் குறித்துப் பார்ப்போம்.
இளமை காலம்
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஸ்காட்லாந்து தேசத்தில் 1806 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் நாள் பக்திமிக்க மற்றும் செல்வந்த பெற்றோர்களாகிய ஜேம்ஸ் டஃப் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இளமையிலே கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். ஆகவே கல்லூரி படிப்பிற்காக ஸ்காட்லாந்தில் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் பல்கழைகளகத்தில் சேர்ந்து (St. Andrew University) அறிவியல் படிப்பில் சிறந்தவராய் முனைவர் பட்டம் பெற்றார்.
ஊழிய அர்ப்பணிப்பு
1820 ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து திருச்சபையில் எழுப்புதல் உண்டாயிற்று. இது தேசமெங்கும் தீ போல் பரவி ஒவ்வொருவருக்கும் உயிர் மீட்சியும், மிஷனெரி தரிசனமும் அடைந்தார்கள். இதனால் நற்செய்திபணி செய்ய அநேகர் முன்வந்தார்கள். இந்நிலையில் ஆண்டவர் அலெக்ஸாண்டர் டஃப் அவர்களை நற்செய்திபணி செய்ய அழைத்தார். இதை உணர்ந்துகொண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் உள்ள வேதாக கல்லூரியில் சேர்ந்து எபிரேயம், கிரேக்கு, இலத்தீன் மொழிகளில் வேதாகமத்தை கற்றும் மற்றும் இறையியல் கல்வி பயின்று சிறந்த வேதபண்டிதராக 1829 ம் ஆண்டு வெளிவந்தார். இந்நிலையில் 1929 ம் இண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் நடைபெற்ற மிஷனெரி தரிசன கூடுகையில் பங்குபெற்றார்.
அப்போது மிஷனெரி தரிசன பொறுப்பாளர் இந்தியாவில் நற்செய்திபணி பெரும்பாலும் தாழ்ந்த ஜாதி மக்களிடமே செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துமத பிராமணர்கள், பணக்கார பொரி முஸ்லிம் சமுதாயத்தார், உயர்ந்த ஜாதி மக்கள் மற்றும் செல்வந்தர்களிடம் நற்செய்திபணியை செய்வதற்கு சரியான வழிமுறைகள் இல்லாமல் இருந்ததினால் அவர்களிடம் நற்செய்திபணி எடுபடவில்லை. என்பதை கூறி இந்தியாவில் நற்செய்தி பணிக்காக மிஷனெரி அறைகூவல் விடுத்தார்கள். இதை ஏற்றுக்கொண்ட அலெக்ஸாண்டர் டஃப் தன்னை இந்தியாவிற்கு கடல் கடந்து சென்று நற்செய்திபணி அறிவிக்க அர்ப்பபணித்தார்.
திருத்தொண்டுப் பணிகள்
மிஷன் பணிக்காக தன்னை அர்ப்பணித்த அலெக்ஸாண்டர் டஃப் Church of Schotland Mission Society ல் வெளிநாட்டு ஊழிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்தான் சர்ச் ஆப் ஸ்காட்லாந்து திருச்சபையின் (Church of Scotland) கடல் கடந்து சென்று நற்செய்திபணி அறிவிக்கும் முதல் மிஷனெரி ஆவார். ஆகவே 1829 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ம் நாள் St. George Church, Edinburgh ல் குருவானவராக அருட்பொளிவு செய்யப்பட்டார்.
கல்கத்தாவில் இறைப் பணி
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் இந்தியாவில் உள்ள உயர்ஜாதி மக்களுக்கு எப்படியும் நற்செய்திபணியை அறிவிக்க, புதிய தரிசனத்தோடு அறிவிக்க, தன் மனைவி அனி ஸ்காட் அவர்களோடு 1830 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் நாள் ஸ்காட்லாந்திலிருந்து இந்தியாவிற்கு கடற்பயணத்தின் மூலம் வந்து கொண்டிருந்தபோது இருமுறை கப்பற்சேதங்களை கடந்து வந்தார். இதில் இவருடைய 800 புத்தகங்களும், உடைமைகளையும், கல்வி சான்றிதழ்களையும் இழக்க கொடுத்தார். ஆயினும் மனம் தளராமல் இந்தியாவில் கல்விபணி மற்றும் நற்செய்திபணி அறிவிக்க 1830 ம் ஆண்டு மே மாதம் 27 ம் நாள் கல்கத்தா வந்து இறங்கினார்.
கல்விப் பணிகள்
கல்கத்தா வந்து இறங்கிய அலெக்ஸாண்டர் டஃப் உயர்ஜாதி மாணவர்களுக்கு புதிய தரிசனமான கலை மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்றுகொடுத்து அதன் மூலம் வேதாகமத்தையும் போதித்து இதனால் அவர்கள் மூடநம்பிக்கைகளை ஒழித்து, அவர்களது அறிவு கண்களை திறந்து இயேசுவே இரட்சகர் என்பதை ஏற்றுக்கொள்ள தன்னை ஆயத்தம் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை மேல்ஜாதி மக்களுக்கும் அறிவித்து அநேக ஆத்தும ஆதாயம் செய்யமுடியும் என்பது இவருடைய அசையாத நம்பிக்கை.
ஆகவே அலெக்சாண்டர் டஃப் உயர்ஜாதி இந்துக்களையும் முஸ்லிம்களையும் மெதுவாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள செய்ய மேற்கத்திய கல்வி முறையை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தார். வேதாக படிப்புகளையும் இயற்பியல் அறிவியலையும் கற்பிப்பதன் மூலம் மாணவர்களை தர்க்க ரீதியாக இந்து மதத்தின் முரன்பாடுகளையும் நடைமுறைக்கு மாறான தன்மையையும் உணர்ந்து கிறிஸ்தவத்தின் உண்மையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார். இந்தியா இயேசுவுக்கு சொந்தமாக வேண்டும் என்றால் கல்வி அறிவும் வேதாகம அறிவும் முக்கியம் என்பதை உறுதியாய் நம்பினார்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் 1830 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ம் நாள் கல்கத்தாவில் இந்தியாவில் முதன்முறையாக ஒரு ஆங்கில பள்ளியை 5 பெங்காலி உயர்ஜாதி மாணவர்களுடன் ஆரம்பித்து, ஒரு வாரம் முடிவதற்குள் பெங்காளி மொழி பேசும் 300 உயர்ஜாதி மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். தினமும் ஆறு மணி நேரம் இவர்களுக்கு ஆங்கில மொழியை கற்றுக்கொடுத்து, அப்படியே வேதாகமத்தை ஆங்கிலத்தில் படிக்க வைத்தார். இது இன்று கல்கத்தாவில் Scottish Church College என்று அழைக்கப்படுகின்றது.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் மேற்கத்திய தத்துவம், சரித்திரம், கணிதம், உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தாலும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் மூன்று ஆண்டுகளுக்குள் 3000 த்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆங்கில முறை கல்வி கற்றார்கள். மேலும் இந்தியாவில் முதன்முறையாக உயர் ஜாதி பெண்களுக்கு என்று 1940 ம் ஆண்டு தனி பாடசாலையும் ஆங்கில கல்விமுறையில் ஏற்படுத்தினார்.
நற்செய்திப் பணிகள்
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்தவ நற்செய்தி கூட்டங்களை ஒழுங்கு செய்து அநேகரை கிறிஸ்துவின் போதனையில் வளரச்செய்தார். இடைவிடாத கல்விப்பணி மற்றும் நற்செய்திபணியினால் அநேக மேல்ஜாதி இளைஞர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் சமுதாயத்தில் மூடநப்பிக்கைக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதில் பலர் நற்செய்திபணி மற்றும் போதக ஊழியத்தில் ஆர்வர் காட்டினார்கள். அநேக மேல்ஜாதி இளைஞர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
இதில் குறிப்பிடதக்கவர்கள் கிறிஷ்ண மோகன் பாணர்ஜி, லால் பெகாரி டே, மகேந்திர லால், கைலாஷ் சந்திர முக்கர்ஜியா, உமேஷ் சந்திர சர்க்கார் போன்றவர்கள் ஆவர். இதில் மோகன் பாணர்ஜி பிற்காலத்தில் குருவானவராக நியமிக்கப்பட்டு அவர் மூலமாக அநேக பெங்காலி உயர்ஜாதி மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இவர்களுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது தற்போது The Church of Jesus, Calcutta என்ற பெயரில் உள்ளது. இப்படியாக வங்காளத்தில் புது யுகம் தோன்றியது.
எதிர்ப்புகள் மத்தியில் ஊழியம்
கிறிஸ்தவ வளர்ச்சியை மிக உண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் ஆங்கில வழி மேற்கத்திய கல்வி முறையை ஏற்றுக்கொண்டாலும் இவரின் நற்செய்திபணியை கடுமையாக எதிர்த்தார்கள். ஆகவே 1847 ம் ஆண்டு பிரம்ம சமாஜ் என்ற இந்து மிஷனெரி ஸ்தாபனத்தை நிறுவி கிறிஸ்தவர்களாக மாறிய மேல்ஜாதி மக்களை தாய் மதம் திரும்பு வற்புறுத்தினார்கள். ஆயினும் அவர்களுக்கு பலன் கிட்டவில்லை.
சமூகப் பணிகள்
அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் ஆங்கில முறை கல்வியோடு நற்செய்திபணியும் சிறந்து விளங்கியதை கண்ட இந்தியாவின் நற்செய்தி பணியின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம் கேரியும், இந்து மதத்தில் நன்கு படித்தவரும் பரந்த மனப்பான்மை கொண்ட இந்திய சமுதாய சீர்திருத்தவாதியான இராஜா ராம் மோகன் ராயும் அதிக ஆதரவு கொடுத்தார்கள். அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் சிறந்த கல்விமுறையினால் உயர்ஜாதி மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இந்தியாவில் சமூக மூடநம்பிக்கையான சதி அல்லது உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், குழந்தை நரபலி, பெண் சிசு கொலை மற்றும் தேவதாசி முறைமைகளுக்கு எதிராக போராட ஒரு கூட்ட மேல்தட்டு வர்க்க மக்கள் எழும்பியது.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் 25 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அவைகளில் சிறந்தது இந்தியாவில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தின் புதிய சகாப்தம் (1837), கர்த்தராகிய இயேசு கிறிஜ்துவின் தலைமை (1844), மிஷனெரிகள் முகவரிகள் (1850), ஆகிவை ஆகும். மேலும் கல்கத்தா வில் ஒரு மருத்துவமனையும், கல்கத்தா பல்கழைக்களகமும் இவருடைய கடுமையான முயற்ச்சியினால் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு ஊழியங்கள்
இவர் மிஷனெரி பணி நிமித்தமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்குள்ள திருச்சபைகளில் போதித்து, வாலிபர்களையும் யுவதிகளையும் சந்தித்து அவர்களுக்கு மிஷனெரி தரிசனத்தை கொடுத்ததினால் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் மற்றும் யுவதிகள் வெளிநாடுகளுக்கு நற்செய்திபணி செய்ய கடந்து சென்றார்கள். அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்களின் ஆங்கில முறை கல்விப்பணி மற்றும் நற்செய்திபணி அறிவிக்கும் முறையை மற்ற மிஷனெரி ஸ்தாபனங்களும் உலகம் முழுவதிலும் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
இறுதிக் காலத்தில்....
அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் இடைவிடாத உழைப்பினால் அவருடைய சரீரம் மிகவும் பலவீனம் அடைந்தது. ஆகவே 1863 ம் ஆண்டு அவருடைய சொந்த தேசமான ஸ்காட்லாந்து தேசத்திற்கு திரும்பினார். பின்னர் அவருடைய சரீரம் முன்னேற்றம் அடைந்தபோது அங்குள்ள வேதாக கல்லூரியில் ஆசிரியராக பணிசெய்து அநேக வேதாகம கல்லூரி மாணவர்களை கிறிஸ்துவுக்குள் ஊன்ற கட்டினார். இந்நிலையில் 1865 ம் ஆண்டு இவருடைய மனைவி அனி ஸ்காட் அம்மையார் மரித்து விட்டார். ஆயினும் தொடர்ந்து 1867 ம் ஆண்டு எடின்பரோ வில் வேதாக கல்லூரியின் பேராசிரியராக பணி செய்து வந்த அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்கள் தன்னுடைய 72 ம் வயதில் 1878 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ம் நாள் நித்திய இளைப்பாறுதலுக்குள் கடந்து சென்றார்.
அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்கள் கல்விப்பணியிலும் நற்செய்திபணியிலும் பல சிகரத்தை தொட்டவர். இவருடைய நினைவாக கல்கத்தாவில் 1910 ம் ஆண்டு டஃப் ஞாபகார்த்த ஆலயம் (Duff Memorial Church, Calcutta) ஒன்று கட்டப்பட்டது.
இவருடைய நற்செய்தி பணி மற்றும் கல்விப்பணியை இந்தியர்கள் எவரும் மறக்க முடியாது. அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஒரு மிகச்சிறந்த கல்விப்பணியாளராகவும் சொல்வன்மை நிறைந்த நற்செய்தி பணியாளராகவும் சிறந்து விளங்கினார் என்றால் மிகையாகாது.
0 Comments