🕯️ குறைந்த தலையறிவு இருந்தாலும் குன்றாத தரிசனம் உடையவர்கள் மட்டுமே சாதிக்க முடியும். - லியோனார்ட் ரேவன்ஹில்.
🕯️ கடவுளின் ஆளுகைக்கு உட்படாது மனிதரால் மட்டுமே ஆளப்படும் சபை தோல்வியுறுவது நிச்சயம். வேதக் கலாசாலையில் பயின்றும் ஆவியின் நிறைவு இல்லாத ஊழியத்தில் அற்புதம் எதுவும் நிகழாது. - சாமுவேல் சாட்விக்.
🕯️ ஆத்துமாக்கள் எப்படியாவது இரட்சிக்கப்படவேண்டுமென்று விருப்பங்கொண்டு நம்பிக்கையுடன் நீ பணியாற்றினாலொழிய பயனைக் காணமாட்டாய். பயனில்லாத ஊழியத்தை வெகு காலம் செய்தும் கவலையின்றிக் காலத்தைக் கழிப்பது, தன்னயத்திற்கும் சோம்பலுக்கும் அறிகுறியாகும். - ரிச்சர்ட் பேக்ஸ்டர்.
🕯️ “இந்நாட்டில் வயல்கள் விளைந்திருக்கின்றன. உண்மையுள்ள வேலையாட்களுக்காகக் கடவுளை வேண்டிக் கொள்ளுவோம். கிறிஸ்துவினிமித்தம் அவர் அப்படிப்பட்ட உத்தம பணிவிடைக்காரரைப் படைபடையாய் அனுப்புவாராக.’’ -சங்கை C.F.ஷ்வார்ட்ஸ் (1778).
🕯️🕯️🕯️
0 Comments