"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
பிலாய் சேகரம் (சத்தீஸ்கர் மாநிலம்)
(மத்திப சபை மன்றம்)
சபை (1)
தூய இம்மானுவேல் தமிழ் ஆலயம், பிலாய்.
(பிலாய் இரும்புத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த தமிழக மக்கள் ஆராதிப்பதிற்கென 1958 இல் ஒரு சிறிய ஹால் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் வீடுகளில் வைத்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் 1992 இல் ஆலயம் கட்டப்பட்டது. 2004 இல் இச்சபை திருநெல்வேலி திருமண்டலத்துடன் இணைந்தது.)
சேகரத் தலைவர்:
Rev. சாலொமோன் ஜோசப் மார்டின்
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 50 மேல்...
தற்போதைய விண்ணப்பங்கள்:
தூய இம்மானுவேல் தமிழ் சபையிலுள்ள இறை மக்களின் நல்வாழ்விற்காகவும்...
இறைப்பணியாற்றும் திருப்பணியாளரின் சேகர பணி மற்றும் மிஷன் பணித்தளங்களில் செய்யும் ஊழியங்களுக்காகவும்....
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் உபத்திரவங்கள் மத்தியிலும், இறை மக்கள் நம்பிக்கையில் நிலைத்து நிற்கவும்...
புதிய ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் அன்பை அறிந்து சபையில் சேர்க்கப்படவும்.... ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments