Ad Code

பேதுருவின் மாமிக்கு சுகம் • Healing of Peter's Mother in Law • Miracles of God's Son

1. தலைப்பு
பேதுருவின் மாமிக்கு சுகம்: பெலவீனம் நீக்கும் இறைமகன்

2. திருமறை பகுதி
மத்தேயு 8:14 - 15
மாற்கு 1 : 29 - 31
லூக்கா 4: 38 - 39

3. இடம் & பின்னணி
இயேசு கிறிஸ்து கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்தில் அற்புதம் செய்த பின்பு (லூக்கா), யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களின் வீட்டிற்கு வந்த போது (மாற்கு) இயேசு இந்த அற்புதத்தை செய்தார்.

4. விளக்கவுரை
பேதுருவின் மாமி சுகம் பெற்ற நிகழ்வு மூன்று நற்செய்தி (Synoptic Gospels) நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் சில வித்தியாசங்கள் உள்ளன. 
மத்தேயு - இயேசு அந்தப் பெண்ணின் கையைத் தொட்டு சுகம் ஆக்கினார்.
மாற்கு - இயேசு அந்தப் பெண்ணின் பக்கத்தில் போய் அவளுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.
லூக்கா - இயேசு கடுமையான ஜுரம் கொண்ட அந்தப் பெண்ணின் பக்கத்தில் குனிந்து நின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார்.

மத்தேயு & மாற்கு இயேசு பேதுருவின் மாமியை தொட்டு/ பிடித்து சுகம் கொடுத்ததாக எழுதியுள்ளனர். உடனே அவள் சுகமடைந்து, தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

5. கருத்துரை
ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்றத் தாழ்வுகள் அதிகமிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இயேசு பேதுருவின் மாமியை தொட்டு சுகமாக்கியது அவரது பட்சபாதமில்லாத சமநிலையை வெளிப்படுத்துகிறது. இறைமகன் இயேசு பெலகீனம் நீக்கும் இறைமகன். சரீர பெலவீனம் நீங்கியது. அதோடு பெண் என்ற தாழ்வின் பாகுபாடும் நீங்கியது. இயேசு கிறிஸ்துவின் ஊழிய காலத்தில், பெண்கள் பலர் அவருக்கு உதவியாக மற்றும் அவருக்கு உதவிகள் செய்வதில் இருந்தனர். அதில் பேதுருவின் மாமியாரும் ஒருவர். சுகம் பெற்ற அவள் பணிவிடை செய்தாள் என்று திருமறை சொல்லுகிறது. ஊழியம் செய்து விட்டு வந்த இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு கொடுக்கும் பணியாக கூட இருந்திருக்க வாய்ப்புண்டு. இயேசுவின் கருணையுள்ளம் & சமநிலை கொடுக்கும் மனம் நமக்கும் வேண்டும்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments