Ad Code

மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள் • திருவசன தியானம் 5/2/2023 CSI Tirunelveli Diocese

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் ஐந்தாம் ஞாயிறு (செப்துவகெசிமா ஞாயிறு & பெண்கள் ஞாயிறு)
தேதி: 5/2/2023
வண்ணம்: கருநீலம்
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 
மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள் 
யோவான் 4:39 "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்."

3. ஆசிரியர் & அவையோர்
இடிமுழக்கத்தின் மக்கள் என்றழைக்கப்பட்ட செபதேயுவின் புதல்வரும் யாக்கோபுவின் சகோதரரும் அப்போஸ்தலருமான யோவான் எழுதிய நற்செய்தி நூல் இதுவாகும். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக இச்சமூகம் "யோவானின் சமூகம்" (Johnannine Community) என்று அறியப்படுகிறது.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கி.பி 70-ன் எருசலேமின் அழிவுக்கு பின்பும் கத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தபடுவதற்கு முன்பும் இது எழுதப்பட்டது. சுமார் கி.பி 8.-க்கும் கி.பி 90-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொய் போதர்கரும் கள்ளத் தீர்ககதரிசிகளும் எழும்பி இயேசு மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று இந்த காலத்தில் துர் உபதேசத்தை பரப்பினர். இதற்கு பதில் கூறும் விதமாக இயேசு மாம்சத்தில் பிறந்தார் என்றும் அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் என்று சாட்சி கூறவும் யோவான் இந்த நூலை எழுதினார். 

5. திருவசன விளக்கவுரை 
இயேசு கிறிஸ்து யூதேயாவிலிருந்து கலிலேயாவை நோக்கி தம்முடைய சீடர்களோடு பயணம் செய்து கொண்டிருக்கிறார். யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு போக மூன்று வழிப் பாதைகளை மக்கள் பயன்படுத்துவார்கள். ஒன்று கலிலேயா கடற்கரை வழி; மற்றொன்று யோர்தானுக்கு அப்புறத்தில் உள்ள வழி; முன்றாவது சமாரியா வழியாக கலிலேயாவுக்கு போவார்கள். சமாரியா கலிலேயாவுக்கு போகக் கூடிய குறுக்கு வழி. ஆனால் யூதர்கள் அந்த வழியை கயன்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் சமாரியர்களை யூதர்கள் அசுத்தமுள்ளவர்கள் என்று கருதினார்கள். சமாரியர்கள் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் (யோவா 4.12). ஆனால் அசீரிய சிறையிருப்பின் போது பிற இனமக்களோடு கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அசுத்தமானவர்கள் என்று யூதர்களால் அழைக்கப்பட்டார்கள் (2இரா 17.24-41). ஆனால் இயேசு ஒரு யூதனாக இருந்தாலும் சமாரியா வழியாக செல்ல விரும்பி, ரோமர்களால் உருவாக்கப்பட்ட பாதையை பயன்படுத்துகிறார். அவர் சமாரியாவின் சீகார் எனப்பட்ட ஊருக்கு (பகல் 12.00 மணிக்கு 6-மணி) இளைப்படைந்து கிணற்றின் அருகே உட்காந்திருந்தார்.

அந்த இடத்தில் இயேசு சமாரியா ஸ்திரியோடே பேசிக் கொண்டிருக்கும் போது தன்னை அவருக்கு மேசியாவாக வெளிப்படுத்துகிறார். சமாரியர்களும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் (யோவா 4.25). சமாரியர்கள் மேசியாவை உலகத்தின் இரட்சகராக எதிர்ப்பார்த்தனர். ஆனால் யூர்கள் இயேசுவை உலக இரட்சகராக ஏற்றுக்கொள்ளவிலிலை. இயேசு சமாரியா ஸ்திரியின் பாவ வாழ்க்கையை சுட்டிக் காட்டுவதின் மூலம் அந்த ஸ்திரி இயேசுவை மேசியா என்று அறிந்து கொண்டு விசுவாசித்து என்று கொண்டாள். அது மாத்திரம் அல்ல இயேசு தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேசியா என்று சீகேர் ஊருக்குள் போய் சாட்சி சொன்னாள். இந்த சமாரியா ஸ்திரியின் சாட்சியின் மூலம் அந்த ஊரில் உள்ள அநேகர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு அவர் மீது விசுவாசம் வைத்தார்கள் (யோ 4.39). இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மட்டும் இல்லை அவர் உலக இரட்சகர் கடவுளை எருசலேமிலும் சமாரியாவிலும் மட்டும் அல்ல; உலகம் முழுவதிலும் தொழுது கொள்ளும் காலம் வரும் என்கிற உலக மிகப் பெரிய மாற்றத்திற்கு இந்த சமாரியா பெண்ணின் சாட்சி அடித்தளமானது. 
    
6. இறையியல் & வாழ்வியல்
"புத்தியுள்ள பெண் தன் வீட்டைக் கட்டுகிறாள்" என்கிறது திருமறை. "பெண்கள் நாட்டின் கண்கள்" என்றும் சொல்வார்கள். ஒரு பெண்ணால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. திருநெல்வேலி திருமண்டல தாய் குளோரிந்தா அம்மையார் வாழ்வு சிறந்த சான்று. இன்றைய காலக் கட்டத்தில், பெண்கள் திருச்சபை சார்ந்த ஆவிக்குரிய மற்றும் நிர்வாக காரியங்களில் பங்குபெற தயங்காமல் முன் வந்து பணியாற்ற வேண்டும். 

7. அருளுரை குறிப்புகள்
       மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள்
   1. இறை நம்பிக்கையின் மூலம் மாற்றம்
(சமாரியா பெண் இயேசுவை நம்பினாள், அவள் மாற்றம் பெற்றாள், அந்த மாற்றம் பரவியது)
   2. இறைவார்த்தை பகிர்வின் மூலம் மாற்றம்
(சமாரியா பெண் இயேசுவைப் பற்றி பிறருக்கு சொன்னாள்)
   3. இறை சாட்சியின் மூலம் மாற்றம்
(இயேசுவை அறிந்த பின்பு, அவள் வாழ்க்கை மாறியது. அதனால் அவள் வாழ்வு சாட்சியாக தெரிந்தது)

Acknowledgement
Rebin Austin T
Union Biblical Seminary 

Post a Comment

0 Comments