1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: லெந்தெனும் நாட்களுக்கு முன்வரும் இரண்டாம் ஞாயிறு
தேதி: 12/02/2023
வண்ணம்: கரு நீலம்
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
படைப்பின் நோக்கத்தை மீறுவது வீழ்ச்சி
ஆதியாகமம் 6.121 "தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்."
3. ஆசிரியர் & அவையோர்
திருமறையின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தை எழுதியவர் மோசே என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, பஞ்சாகமம் (Pentatuch) என்னும் முதல் ஐந்து நூல்கள் மிகவும் பின்னான காலத்தில் எழுதப்பட்டன என்று பல கருத்துகள் உள்ளன. எனினும், மோசே எழுதியிருக்க வாய்ப்புகள் பல உண்டு. ஏனென்றால், இஸ்ரவேல் மக்களுக்கு இறை வார்த்தையைக் கொடுக்க கடவுள் பயன்படுத்திய மனிதர் மோசே.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
ஆதியாகமம் 6.12 எழுதப்பட்ட காலம் சரியாக நமக்கு தெரியாவில்லை. ஆனால், நோவாவின் காலக்கட்டத்தில் மனுக்குலம் எப்படியிருந்தது என்று இந்த வசனம் விளக்குகிறது.
5. திருவசன விளக்கவுரை
கடவுள் மனுக்குலத்தைப் படைத்து கிட்டத்தட்ட 1656 ஆண்டுகள் தான் ஆயிருந்தது. அதாவது நோவா ஆதாமுக்கு பத்தாம் தலைமுறை. அதற்குள்ளாக, கடவுள் மனுக்குலத்தை படைத்ததின் நோக்கத்தை மீறிப்போன ஒரு சூழ்நிலை. கடவுளின் திட்டத்தை விட்டு விட்டு, தங்கள் மனம் போன போக்கில் மணுக்குலம் வாழத் தொடங்கியது அவர்களுக்கே வீழ்ச்சியாக மாறிப் போனது.
கொடுமை (6:11) என்ற வார்த்தை மூல மொழியில் (ḥā·mās) வன்முறையைக் குறிக்கும் வார்த்தையாகும். சீர்கெட்டது & வழியைக் கெடுத்தல் (6:12) என்ற இரண்டும், ஒரே மூல வார்த்தையை (shachath) எபிரேய மொழியில் கொண்டுள்ளன. அதற்கு (Destroy, Corrupt, Spoil) என்ற அர்த்தங்கள் உண்டு. மூல மொழியில் வழி என்பதோடு "தங்கள் வழி" என்று வருகிறது. அதாவது கடவுளின் வழியை விட்டு விட்டு, தங்கள் சுய வழியில் சென்றதைக் குறிக்கிறது. அதாவது, கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டு வன்முறையால் நிறைந்திருந்தது. மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர். தங்கள் பார்வைக்கு சரியானதைச் செய்தார்கள். கடவுளுக்குப் பயப்படாமல் வாழ்ந்ததால், அழிவும் துன்பமும் அவர்கள் வழியில் இருந்தன.
6. இறையியல் & வாழ்வியல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நவீன காலக்கட்டத்தில் (Post Modern Era) நம்மை படைத்த கடவுளுக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாவம் ஒரு விளையாட்டை போல் மாறிவிட்ட காலம் இது. கடவுளை மறந்து விட்டோம்; நம்மை கடவுள் படைத்ததின் நோக்கத்தை மறந்து விட்டோம். மாறாக, நிரந்தரமற்ற காரியங்களில் சாதிக்க நினைத்து, குறுக்கு வழிகளில் முயற்சித்து கொண்டிருக்கிறோம். நம் தீமையான எண்ணங்களால், செயல்பாடுகளால் தினமும் கடவுளை மறுதலிக்கிறோம். இறைவன் இன்றி ஒரு அணுவேதும் அசையாது என்பதை உணர்ந்து இறை சித்தமறிந்து செயல்பட அர்ப்பணிப்போம்.
7. அருளுரை குறிப்புகள்
படைப்பின் நோக்கத்தை மீறுவது வீழ்ச்சி
1. படைப்பின் நோக்கத்தை மீறுதல்
ஆதி 6: 1 - 5
2. படைப்பாளரின் இதயக் குரல்
ஆதி 6: 7
3. படைப்பின் வீழ்ச்சி/ எழுச்சி
ஆதி 6: 11 - 12 வீழ்ச்சி; 6: 8-9 எழுச்சி
0 Comments