பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த நாத்திகன் இங்கர்சாலும் அவன் நண்பர்களும் கிழக்கத்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார்கள். அநேக நாடுகளின் தீவுகளை சுற்றிப் பார்த்தார்கள். ஒரு சிறிய தீவிலுள்ள மரத்தின் கீழ் ஒரு வாலிபன் வேதபுத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற இங்கர்சால், "ஏன் தம்பி கட்டுக் கதைகள் நிறைந்த ஒன்றுக்கும் உதவாத பழங்காலப் புத்தகத்தை படிக்கிறாய்? அதை தூக்கி எறி, நான் கொடுக்கும் இந்த விஞ்ஞானப் புத்தகத்தை படி உன் அறிவு வளரும், உன் வாழ்வுக்கும் பிரயோஜனமாக இருக்கும்" என்றார். வாலிபன் இங்கர்சாலை ஏற இறங்கப் பார்த்துவிட்டு , "இந்த வேத புத்தகத்தை தூக்கி எறியச் சொல்கிறீர்கள், இப்புத்தகம் எங்களிடம் வராமலிருந்தால் இந்நேரம் உங்கள் அனைவரையும் கொன்று, வேகவைத்து சாப்பிட்டிருப்போம்" என்றானாம். நரமாமிசம் உண்ணும் மனிதர்களை நாகரீகமாக மாற்றியது பரிசுத்த வேதம்.
வேதத்தை கையிலேந்தி சென்ற விலையேறப் பெற்ற மிஷனெரிகளால் உலகம் நாகரீகமாக மாறியது என்பது எல்லா சரித்திர ஆசிரியர்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மை.
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது. உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன் (சங்கீதம்119:140).
0 Comments