Ad Code

Earthquakes in the Bible

வேதாகம காலத்திலே 14 பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

1. பூமி சிருஷ்டிப்பின் வாரத்தில் மூன்றாம் நாளிலே அதாவது ஆதியாகமம் 1: 9- 10 ல் பூமியின் கண்டங்களின் மேலிருந்த தண்ணீர்களை முழுவதும் மேலே தூக்கும் நிகழ்ச்சி உள்ளது. இதை யோபு, தாவீது தங்கள் புத்தகங்களில் எழுதியிருப்பார்கள். 
(யோபு 38:4-7; சங்கீதம் 148:1-6; & 104:5-6). இதன்மூலம் பூமியின் கண்டங்களின் மேலோடும் கடலின் கீழ் இருக்கும் பூமியின் மேலோடும் மாறி விடும். இதுவே பூமியின் இரண்டு மேலோடுகள். தற்போது கடலின் கீழிருக்கும் மேலோடு 5 - 10 கி.மீட்டரும் 
கண்டங்களின் மேலோடு 
30 - 50 கி. மீட்டர் தூரம்.  

2. நோவாவின் வெள்ளத்திலும் பூமியின் ஒடு மாறியுள்ளது.

3. சோதாம் - கொமோரோ பட்டணங்களின் பேரழிவு.
அக்கினி கந்தகங்களின் பொழிவு. 
இயேசு கிறிஸ்து இதைப்பற்றி தேவனின் நியாயதீர்ப்பைப் பற்றி கூறியிருப்பார். 

4. அடுத்து செங்கடல் பிளவும் பூமியோட்டை மாற்றி பூமியை அதிரச் செய்துள்ளது. 
ஏறக்குறைய முப்பது லட்சம் பேர் ஒரே இரவில் கடந்து போயிருக்கிறார்கள். 100 அடி 200 அடி அல்ல கிலோமீட்டர் அகலத்தில் கடல் பிளக்கப்ட்டிருக்க வேண்டுமென்று பொறியாளர்கள் கூறுகின்றனர். 

4. கர்த்தர் சீனாய் மலையிலே இரண்டு முறை பூமியதிர்ச்சியை தந்துள்ளார். அவரின் பிரசன்னத்தின் காரணமே அவைகள்.

யாத்திராகமம் 19: 18 ல் பார்க்கலாம்.

"கர்த்தர் சீனாய்மலையின் மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது."

5. வனாந்திரத்திலே கோராகு சபையினருக்கு நடந்த நியாயதீர்ப்பு எண்ணாகமம் 
16: 1- 40 ல் பார்க்கலாம்.

பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், தோராகும் கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. 

அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். 

6. எரிகோ மதில் விழுந்தது. 
 (யோசுவா 6)

7. பெலிஸ்தயர்கள் பாளையத்தில் நடந்தது. 

(1 சாமுவேல் 14: 15)
பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது. 

8. ஓரோப் (சீனாய்) மலையிலே எலியா 

(1 இராஜாக்கள் 19: 12)
 பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. 

9. ஆமோஸ் பூமியதிர்ச்சி 
   - கி.மு 750 

ஆமோஸ் 1: 1
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள். 

10. கும்ரான் பூமியதிர்ச்சி 
 - கி. மு 31 (புதிய, பழைய ஏற்பாடு புத்தகங்களுக்கு இடையேயான காலத்தில் நடந்தது)

11. எருசலோமில் சிலுவை மரணத்தில் 
- மார்ச் 3, கி.பி. 33 
( 3 - 3 - 33)

மத்தேயு 27: 51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. 

12. உயிர்ந்தெழுந்ததற்க்குப் பிறகு 
- மார்ச் 5, கி.பி. 33 ( 5 - 3 - 33)

மத்தேயு 28: 2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 

13. எருசலோம் ஜெப அறையிலே 

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 31
அவர்கள் ஜெபம் பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள். 

14. பிலிப்பி சிறைச்சாலையில் 

(அப்போஸ்தலருடைய நடபடிகள் 16: 26)
சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. 
கர்த்தர் தேசங்கள் மீது கொண்ட கோபத்தினாலேயே இது மாதிரி சம்பவங்கள் நடந்துக்கொண்டு வருகின்றன என்பதை 
தாவீது, யோபு, ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகள் சொல்லியுள்ளனர்.

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 
-சங்கீதம் 18 :7

அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 
- யோபு 26 :11

கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள், ராமா அதிர்கிறது, சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது. 
- ஏசாயா 10 :29

இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய். 
- ஏசாயா 29 :6 

15. நடந்துக் கொண்டிருக்கிற பூமியதிர்ச்சிகள் 

மத்தேயு 24: 7)
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 

16. கோக் - மாகோக் (ரஷ்யாவில்) நடக்கப்போகும் பூமியதிர்ச்சி

17. இயேசுவின் நடக்கப்போகும் தீர்க்கதரிசன பூமியதிர்ச்சிகள் -

இதுவே கடைசி கால அழிவு.

(வெளிப்படுத்தின விசேஷம் 6: 12)
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று. 

வெளிப்படுத்தின விசேஷம் 
11: 13 அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 

(வெளிப்படுத்தின விசேஷம் 16: 18)
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை. 

*

Post a Comment

0 Comments