முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதப்பிறப்பிலும் "இறையதிகாரம்" (God's Sovereignty) என்ற தலையங்கத்தின் கீழ் தியானிக்க இருக்கிறோம். அதில் முதலாவதாக, இறைப்பணியில் இறையதிகாரம் (God's Sovereignty in God's Ministry) என்ற கருப்பொருளை வைத்து சிந்திப்போம். ஜனவரி மாதப்பிறப்பு செய்தி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
1. அழைக்கும் அதிகாரம்
"ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை" (எபிரேயர் 5:4). லூக்கா 5 இல் முதற்சீடர் சீமோன் பேதுருவை இயேசு கிறிஸ்து அழைத்தார். இறைப் பணிக்கு அழைப்பு என்பது கடவுள் தம் அதிகாரத்தின் கீழ் பணியாற்ற நமக்கு வாய்ப்பு தருகின்றார்.
2. பயிற்சிவிக்கும் அதிகாரம்
"எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்" (எபிரேயர் 12:11). மத்தேயு 16 இல் பேதுரு இயேசுவிடம் பாராட்டையும், பிறகு கண்டிப்பையும் பெறுகின்றார். பயிற்சிக் காலம் ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. இதே பேதுரு தான் இயேசுவை மறுதலித்து பின் மனம் திரும்பினார். அழைத்த கடவுள் பல்வேறு சூழல்களில் நம்மை உருவாக்குகிறார்.
3. அதிகாரமளிக்கும் அதிகாரம்
"இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" (லூக்கா 10:19). யோவான் கடைசி அதிகாரத்தில் பேதுருவுக்கு எதிர்கால ஊழியம் குறித்து சொல்லப்பட்டது, ஆதி திருச்சபையின் முக்கிய அப்போஸ்தலராக பேதுரு செயல்பட்ட போது நிறைவேறியது. அழைத்து பயிற்சி தருகின்ற கடவுள், பிறருக்கு நாம் நன்மை செய்யும்படிக்கு, நமக்கு அதிகாரம் தருகின்றார். அந்த அதிகாரம் இறுமாப்பாக ஆள்வதற்கு அல்ல என்பதையும் திருமறை (மத் 20.25) தெளிவுபடுத்துகிறது.
நிறைவுரை
இயேசு கிறிஸ்துவே மகா பிரதான ஆசாரியர். அனைத்து இறைப் பணியாளர்களும் அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறோம். கடவுளுக்கும், அவரது வார்த்தைகளுக்கும் கீழ்படிவது தான் அவரது ஊழியர்களுக்கு அழகும் மாண்பும் கூட. ஆகவே இறையதிகாரத்திற்கு உட்பட்ட நாம் அவருக்கு கீழ்படிந்து திருப்பணி செய்வோம். இறையாசீர் பெறுவோம்...
Acknowledgement
Y. Golden Rathis
Delivered in BD IV Tamil Fellowship
Serampore College
0 Comments