1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
தேதி : 12/03/23
வண்ணம்: கருநீலம்
திருமறை பாடங்கள்:
சங்கீதம் :
2. திருவசனம் & தலைப்பு
ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
"உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
லூக்கா 15:20 (திருவிவிலியம்).
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
லூக்கா 15:20 (பவர் திருப்புதல்).
3. ஆசிரியர் &அவையோர்
இந்த நற்செய்தி நூலை எழுதியவர் லூக்கா என்பவர் ஆவார். இவர் கிரேக்க இனத்தை சார்ந்த மருத்துவர் (கொலோ 4:14). இவர் பவுல் அப்போஸ்தலரின் நண்பரும் மற்றும் உதவியாளருமாயும் இருந்தார். அப்போஸ்தலர் நடபடிகள் லூக்கா நற்செய்தியாளரால் எழுதப்பட்ட நூல். லூக்கா நற்செய்தி நூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இவ்விரண்டு நூல்களும் கனம் பொருந்திய தெயோபிலு -வுக்கும் மற்றும் பிற இனத்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த நூல் சுமார் கி.பி. 60-ல் ரோமில் வைத்து லூக்கா எழுதிருக்க வாய்ப்பிருக்கிறது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எருசலேம் அளிக்கப்பட்ட கி.பி. 70 -க்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
5. திருவசனம் விளக்கவுரை
லூக்கா 15-ம் அதிகாரத்தில் வரும் மூன்று உவமைகளும் கடவுள் பாவிகளை ஏற்றுகொள்கிற தன்மையையும் மற்றும் பாவிகள் மனதிரும்புவதால் கடவுளுடைய ராஜ்யத்தில் ஏற்படும் சந்தோசத்தையும் மையமாக கொண்டிருக்கிறது (வசனம் 7). பாவிகளும் ஆயக்காரரும் (வரி தண்டுபவரும் ) யேசுவினிடதில் கடவுளுடைய வார்த்தையை கேட்க வந்தார்கள் ஆனால் அதை பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் விரும்பவில்லை. பாவிகள், ஆயக்கரார்கள் கடவுளிடத்தில் மனந்திரும்புவது பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் நடுவில் சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை. கடவுள் எப்படி பாவிகளை ஏற்றுகொள்கிரார் மற்றும் பாவிகள் மனதிரும்புவதால் கடவுளுடைய ராஜ்யத்தில் ஏற்படும் சந்தோசத்தையும் இயேசு உவமையின் மூலம் விளக்குகிறார்.
லூக்கா 15-ம் அதிகாரத்தில் வரும் மூன்றாவது உவமையில், மனம்திருந்தி வரும் இளைய மகனை எப்படி ஒரு தகப்பன் ஏற்றுக்கொள்கிறார் என்பதை குறித்து இயேசு விளக்குகிறார். இந்த உவமையில் இரண்டு உரையாடல்கள் உள்ளது முதல் உரையாடல் இளைய மகன் மற்றும் தகப்பன் (வசனம் 11-24) இரண்டாவது உரையாடல் மூத்த மகன் மற்றும் தகப்பனுக்கும் இடையில் நடைபெறுகிறது (வசனம் 25-32). இந்த உவமையின் இறுதியில் லூக்கா; மூத்த மகனுடைய சிந்தனையை, பரிசேயேர்கள் மற்றும் வேதபாரகர்களின் சிந்தனைக்கு ஒப்பிடுகிறார் (வசனம் 28).
வசனம் 20-ல் தகப்பனிடமிருந்து எல்லா ஆஸ்தியையும் பிரித்து வாங்கிகொண்டு அதை தவறான வழியில் அழித்துவிட்டு மீண்டும் தகப்பனிடதிற்கு வரும் மகனை தகப்பன் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் இந்த வசனத்தின் மைய கருத்து. யூத பாரம்பரியத்தில் ஆஸ்தியில் பங்கு வாங்கிகொண்டு அதை தவறான வழியில் அழித்துவிட்டால் மீண்டும் அவர்களை ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஆனால், இங்கு அவனுடைய தகப்பன் தன்னிடம் மன்னிப்பு கேட்பதற்கு முன்பாகவே மகன் மீது மனது உருகி அவனை கட்டி தழுவி முத்தமிட்டார். மனதுருக்கம் கடவுளுடைய பண்பு நலன்களில் மிக முக்கியமான ஒன்று. தகப்பனுடைய மனதுருக்கம் இந்த உவமையின் மைய கருத்தை இன்னும் ஆளப்படுத்துகிறது, இவையெல்லாம் தகப்பன் தன்னுடைய பிள்ளையை மன்னித்து ஏறறுக் கொண்டு மீண்டும் உறவை புதுப்பிக்கிறதர்க்கு அடையாளம்.
6. இறையியல் & வாழ்வியல்
நாம் தவறுகளை செய்யும் போது நமக்குள் குற்ற மனசாட்சி வருகிறது அது நம்மை மீண்டும் கடவுளிடதில் திரும்ப விடாமல் தடுக்கிறது. ஆனால் நாம் இளைய குமாரனைப் போல மீண்டும் தகப்பனிடத்தில் திரும்பும் போது மீண்டும் அந்த உறவை புதுப்பித்துக் கொள்ளலாம். நாம் தவறுகளை செய்தாலும் கடவுள் மனதுருக்கதோடு நம்முடைய மனதிரும்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிரார். அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிற ஆண்டவர்.
7. அருளுரை குறிப்புகள்
ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
1. திரும்பும்போது ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
2. சம அந்தஸ்தில் ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
3. உரிமையளித்து ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
எழுதியவர்
தா. ரெபின் ஆஸ்டின்
0 Comments