1.ஞாயிறு குறிப்புகள் :
ஞாயிறு : கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன் வரும் 3ம் ஞாயிறு ( தவக்காலம் நான்காம் ஞாயிறு)
வண்ணம் : கருநீலம்
திருமறை பாடங்கள்
பழைய ஏற்பாடு : யாத்திராகமம் 3 : 1−14
நற்செய்தி பாடம் : லூக்கா 13 : 10− 17
புதிய ஏற்பாடு : கலாத்தியர் 5 : 1− 12
சங்கீதம் 82
2. திருவசனம் & தலைப்பு :
விடுதலையாக்கும் கிறிஸ்து
கலாத்தியர் 5.1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். ( பவர் திருப்புதல்)
கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தனை என்னும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ( திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்:
இந்த கடிதத்தை எழுதியவர் அப்போஸ்தலனாகிய பவுல் என்பவர் ஆவர்.(கலாத்தியர் 1 : 1) . கலாத்தியாவிலுள்ள திருச்சபைக்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இந்த கடிதத்தை எழுதினார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
இந்த கடிதத்தை சுமார் கி.பி ( 52 − 53 ) ஆண்டுகளில் எழுதியிருக்கலாம், என்று வேத ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. ஒரு சில வேத அறிஞர்கள் எருசலேம் சங்கத்துக்கு முன்பே அதாவது கி.பி 49 முன்பே எழுதப்பட்டியிருக்கும் என்று கருதுகின்றனர். இந்த கடிதம் மூலமொழியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கலாத்தியர் திருச்சபையில் யூதர்மயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் , பவுல் போதித்த போதனைக்கு எதிராக பேசினார்கள். நியாயப்பிரமாணத்தினால் மட்டுமே இரட்சிப்பு பெற முடியும் என்று போதித்தார்கள். பிற இனத்தார்கள் விருத்தசேதனம் போன்ற சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று வாதம் செய்தார்கள். பவுல் உங்களுக்கு தவறான போதனை செய்தான் என்று கூறினார்கள். ஆகையால் பவுல் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலரின் போதனை முறியடிக்க கடுமையான முறையில் கலாத்திய திருச்சபைக்கு இந்த கடிதத்தை எழுதுகிறார்.
5. திருவசனம் விளக்கவுரை:
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய திருச்சபைக்கு அறிவுரை கூறுகிறார். சுயாதீனம் என்றால் விடுதலை என்று பொருள். கலாத்திய சபையாரைக் குறித்து பவுல் சொல்லும் போது, முன்பு பாவம் , அக்கிரமம் என்று பாவ அடிமைத்தனத்தின் நுகத்தில் இருந்தீர்கள். உங்களுக்காக உங்கள் பாவங்களுக்காக அவர் பாடுகளை ஏற்றுக்கொண்டு சிலுவையுண்டு மரித்து உயிர்த்தெழுந்து உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுதலைப்பண்ணினார். உங்களுக்கு வாழ்வு உரிமை கொடுத்திருக்கிறார். ஆகையால் நீங்கள் மறுபடியும் உங்கள் பாவங்களுக்கு திரும்பாமல் இயேசு கொடுத்த விடுதலையின் வாழ்வில் நிலைத்து கொண்டிருங்கள் என்று கூறுகிறார். நியாப்பிரமாணத்திலிருந்து உங்களை விடுதலை செய்து பிரதான கட்டளையாகிய அன்பை கொடுத்திருக்கிறார். நியாப்பிரமாணம் கைகொள்ள வேண்டும் அநேகர் தவறான போதனைகளை போதித்தாலும், நியாப்பிரமானத்தின்படி, விருத்தசேதனம் பண்ணி இருந்தாலும், பண்ணாவிட்டாலும் எந்த பயனும் இல்லை. அன்பின் கிரியையை செய்வதே விசுவாசம் அதுவே பயன் உள்ளது.
6. இறையியல் & வாழ்வியல்:
பாவ அடிமைத்தனத்திலிருந்து , பலவீனத்திருந்து விடுதலை பெறமுடியுமா?? என்று நினைக்கும் நம் வாழ்வில் இயேசு கிறிஸ்து விடுதலை தருகிறார். சிலுவையினால் நமக்கு விடுதலை கொடுத்திருக்கிறார் , அதை உணராதவர்களாய் இன்னும் பாவத்தில் இருப்போம் என்றால் இன்றே விடுதலை தரும் இயேசுவை நம்பி அவரை சேர வேண்டும்.
7. அருளுரை குறிப்புகள் :
விடுதலையாக்கும் கிறிஸ்து
1. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கும் கிறிஸ்து
2. அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும் கிறிஸ்து
3. பலவீனத்திலிருந்து விடுதலையாக்கும் கிறிஸ்து
எழுதியவர்
திரு. மான்சிங் கிளிண்டன்
குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி,
சென்னை.
0 Comments