Ad Code

புயலை அமர்த்திய இயேசு: இயற்கையின் மீது இறைமைந்தரின் அதிகாரம் Miracles of Jesus Christ

1. தலைப்பு
புயலை அமர்த்திய இயேசு: இயற்கையின் மீது இறைமைந்தரின் அதிகாரம்

2. திருமறை பகுதி
மத்தேயு 8:23-27 
மாற்கு 4:35-41 
லூக்கா 8:22-25

3. இடம் & பின்னணி
இயேசு அன்று முழுவதும் வேலை செய்து, களைப்பாக இருந்ததால், சாயங்காலத்தில், சீடர்களிடம் “அக்கரைக்குப் போகலாம் வாருங்கள்” என்று சொல்லி, இயேசு ஒரு படகில் ஏறி கப்பர்நகூமிலிருந்து புறப்படுகின்றார். அற்புதம் செய்து கரை சேர்ந்த பின்பு, கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள் (லூக்கா 8:26). கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் கெரசேனர் என்ற பகுதி இருக்கிறது. இந்தப் பகுதி, தெக்கப்போலி என்றும் அழைக்கப்படுகிறது. தெக்கப்போலியைச் சேர்ந்த நகரங்களில் யூதர்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இது கிரேக்க கலாச்சாரத்தின் முக்கிய இடமாக இருக்கிறது. அக்கரை ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை. கலிலேயா கடல் ஒரு பெரிய நன்னீர் ஏரி; கிட்டத்தட்ட 21 கிலோமீட்டர் நீளமாகவும், 12 கிலோமீட்டர் அகலமாகவும் இருக்கிறது; இது சற்று ஆழமான ஏரி.

4. விளக்கவுரை
பொதுவாக, கலிலேயா கடலின் மேற்பரப்பு வெதுவெதுப்பாக இருக்கும். சில சமயங்களில், மலைகளிலிருந்து வீசுகிற குளிர்காற்று, கலிலேயா கடலின் வெதுவெதுப்பான மேற்பரப்பை வேகமாக மோதும்போது பயங்கர புயல் உருவாகும். இப்போதும் அதேதான் நடக்கிறது. அலைகள் படகின்மீது ஆக்ரோஷமாக மோதுகின்றன. ‘படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்ததால், மூழ்கிவிடும் ஆபத்து’ ஏற்படுகிறது. (லூக்கா 8:23) ஆனால், இயேசு இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறார். அப்போஸ்தலர்கள் இதுபோன்ற பல புயல்களைப் பார்த்திருக்கிறார்கள். அதனால், தங்களுடைய அனுபவத்தை வைத்து, படகை ஓட்ட மும்முரமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. 

உயிருக்குப் பயந்து, அவர்கள் இயேசுவை எழுப்புகிறார்கள். “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று அலறுகிறார்கள். (மத்தேயு 8:25) தண்ணீரில் மூழ்கிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். இயேசு எழுந்ததும், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். (மத்தேயு 8:26) பிறகு காற்றையும் கடலையும் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்று சொல்கிறார். (மாற்கு 4:39) உடனே, சீறிக்கொண்டிருந்த புயல்காற்று அடங்குகிறது, பொங்கியெழுந்த அலைகள் அமைதியாகின்றன. (


5. கருத்துரை
நற்செய்தியாளர்கள் இயேசுவின் அதிகாரத்தின் மகத்துவத்தை (εξουσíα, exousia ) இயேசு கடலில் ஏற்பட்ட புயலை அமைதிப்படுத்தும் வாயிலாக எடுத்தியம்புகின்றனர். அவர் தனது சீடர்களுடன் படகில்இயேசு இந்த அற்புதத்தை செய்த பின்பு, இயேசுவின் சீடர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள் (மாற்கு 4:41). ஆம் இயற்கை தன்னை படைத்தவருக்குக் கீழ்படியாமல் இருக்குமா? இறைமகன் எவ்வளவு அதிகாரம் படைத்தவர் என்பதை மிக தெளிவாக காற்று மற்றும் கடலின் கீழ்படிதல் வெளிப்படுத்துகின்றன. இயற்கையைக் கட்டுப்படுத்துகிற சக்தி கடவுளுடைய மகனுக்கு இருப்பதைப் பற்றிப் படிக்கும்போது நம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. சிந்தித்துப் பார்ப்போம். உயிருள்ள மற்றும் ஆறறிரிவுள்ள நாம் இறைமைந்தரின் அதிகாரத்துக்கு எப்படி கீழ்படிகிறோம்? இறை வார்த்தைக்கு செவிகொடுப்போம். நல்வாழ்வு வாழ்வோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments