Ad Code

ஐந்து அப்பம் மற்றும் இரண்டு மீன்: மக்கள் மீது அக்கறையுள்ள இறைமைந்தர் Miracles of Jesus

1. தலைப்பு
ஐந்து அப்பம் மற்றும் இரண்டு மீன்: மக்கள் மீது அக்கறையுள்ள இறைமைந்தர்

2. திருமறை பகுதி
மத்தேயு14:13-21 
மாற்கு 6:30-44 
லூக்கா 9:10-17 
யோவான் 6:1-15

3. இடம் & பின்னணி
இந்த அற்புதம் மிகவும் முக்கியமானதால் நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டுள்ளது. இயேசு கலிலேயாகடலின் அக்கரையில் (யோவான் 6 :1) பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்திற்குத் தனித்திருக்கும்படி சென்றார். (லூக்கா 9 : 10) அந்த நாட்கள் யூதருடைய பஸ்கா பண்டிகையின் வேளையாயிருந்தது. (யோவான் 6 :4) அந்த இடத்தில் சீஷர்களுடன் மலையின் மேலேறி உட்கார்ந்தார். (யோவான் 6 : 3) சகல பட்டணங்களிலுமிருந்து அநேக ஜனங்கள் கால்நடையாய் அவ்விடத்திற்குக் கூடி வந்தனர். அங்கு தான், இயேசு உபதேசம் செய்த பிறகு இந்த அற்புதத்தை செய்தார். 

4. விளக்கவுரை
வனந்தரமான ஓ¡¢டத்தில் இயேசு ஏராளமான மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் சென்றபின்பு அவருடைய சீடர்கள் அவா¢டத்தில் வந்து ; இது வனாந்தரமான இடம் , வெகுநேரமுமாயிற்று; புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள், உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் களுமுண்டு என்றார்கள். ஏனைய மூன்று ஒத்தமை நற்செய்திகளில், 'ஐந்து அப்பங்கள்' என்று கூறப்பட்டுள்ள வேளையில், அந்தச் சிறுவன் கொண்டுவந்திருந்தது, 'ஐந்து வாற்கோதுமை அப்பங்கள்' என்று, யோவான் மட்டும் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன் களையும் ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பா¢மாறும்படி தம்முடைய சீடர்களைப் பணித்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன் களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் 

5. கருத்துரை
தனிமையான இடத்தை இயேசு தேடியதிலிருந்து ஓய்வில்லாமல் ஊழியம் செய்தாரென்று அறிகிறோம். ஓய்வெடுக்க வந்தவர் ஜனக்கூட்டத்தைப் பார்த்து மனதுருகினார். முதன் முதல் ஆவிக்குரிய பசியைப் போக்க அவர்களுக்குப் போதித்தார். பின்னர் நல்ல உணவை அற்புதமாகக் கொடுத்து மக்கள் பசியை நீக்கினார். இயேசுவே ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் தேவையானதைத் தந்து போஷிக்கிறவர் என்று அறிகிறோம். தம் மக்கள் மீது அக்கறை உள்ள இறைமைந்தர் இயேசு கிறிஸ்து என்றால் மிகையாகாது. 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments