தீர்க்கதரிசனங்கள் இன்று (கிறிஸ்தவத்தில்) உள்ளதா?
மேசியா (கிறிஸ்து) இயேசு வந்து விட்டதை (கிறிஸ்தவர்கள்) நாம் நம்புவதால் பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டன. ஆனால் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் வருகை குறித்த தீர்க்கதரிசனம் மாத்திரம் நிறைவேற வேண்டியுள்ளது.
அப்படி என்றால், தீர்க்கதரிசன வரம் என்று பவுல் சொல்லுவது என்ன? அது தீர்க்கதரிசன கொடை அல்லது ஈவு. கிறிஸ்துவை பற்றிய மறைபொருளை அறிந்து கொள்வது மற்றும் புரிந்து கொள்வது ஆகும். பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துலால் அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசன வார்த்தைகளை விளக்கி கூறினார்கள்.
இன்று நாம் கேட்கும் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வரும் வார்த்தைகள் சரியானதை என்ற கண்டுபிடிக்க Rev.Dr. ரவிந்தீரர் அவர்கள் சொல்லுகின்ற 7 படிநிலைகள் உதவியாக இருக்கும். இவை வேதத்திற்கு எதிராக உள்ளதாக என்ற சோதித்தறிய இயலும்.
தீர்க்கதரிசனங்களை புரிந்து கொள்ள 7 படிகள்
1. கடவுள் எப்படிப்பட்டவர்
கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை முதலாவது உணர்த்தும். மகா பரிசுத்தமுள்ள சர்வவல்லமையுள்ள கடவுள்: யூதர்கள் கடவுளை இவ்விதமாய் ஒரே குணாதிசயத்தோடு பார்க்கிறார்கள். நாம் இதை இரண்டு குணங்களாக பார்க்கிறோம். எப்படியாயினும் கடவுள் துய்மையானவர் மற்றும் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை தீர்க்கதரிசிகள் உரைத்ததை நம்மால் காண முடியும்.
2. ஜனங்கள் செய்யும் பாவங்கள்
அடுத்ததாக தீர்க்கதரிசிகள், மக்கள் எவ்விதமான பாவங்களில் வாழ்கிறார்கள், எப்படி கடவுளை விட்டு பின்வாங்கினார்கள் என்பதை எடுத்துரைப்பார்கள். சான்று: அந்நிய தேவர்களை வழிபடுதல்
3. பாவத்திற்கான தண்டனைகள்
அடுத்ததாக தீர்க்கதரிசிகள், இந்த அக்கிரமங்களினிமித்தம் என்ன தண்டனை வரும், அது எவ்விதமாக இருக்கும் என்று அறிவிப்பார்கள். சான்று: நாடு கடத்தப்படல், அடிமைத்தனம்
4. கடவுளின் அன்பு
கடவுள் அன்புள்ளவர் என்பதை ஜனங்களுக்கு தீர்க்கதரிசிகள் சொல்வார்கள். ஆகையால் மக்கள் சோரம் போனாலும் கடவுளின் அன்பு இன்னும் அவர்கள் மீது உள்ளது என்பதை விளக்குவார்கள்.
5. மனந்திரும்புதலுக்கு அழைப்பு
அன்புள்ள கடவுளிடம் திரும்புமாறு அழைப்பு கொடுப்பர். மக்கள் மனந்திரும்ப அழைப்பு கொடுப்பது தான் தீர்க்கதரிசனங்களின் மைய நோக்கமாகும்.
6. விடுதலைக்கான வாக்குறுதி
மக்கள் மனம் மாறினால் விடுதலையின் வாழ்வு உண்டு என்ற நிச்சயத்தை தீர்க்கதரிசனம் கொடுக்கும். சான்று: சொந்த நாடு திரும்புதல்.
7. மேசியாவிற்கான எதிர்நோக்கு
அந்த விடுதலையின் நிறைவு மெசியா எனும் கிறிஸ்து வருகையில் முழுமை பெறும் என்று உரைப்பர். யூதர்கள் இயேசுவை மெசியாவாக நம்பாததால் இன்னும் இவ்வித நம்பிக்கை கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்கள் நித்திய ஜீவனை நோக்கிய நம்பிக்கை கொண்டுள்ளனர்.
0 Comments