1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் இரண்டாம் ஞாயிறு
தேதி: 23/04/2023
வண்ணம்: வெள்ளை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
கிறிஸ்துவின் விருந்தோம்பலுக்கு அழைப்பு
இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். .
யோவான் 21:12 (பவர் திருப்புதல்)
இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார். நற்செய்தி 21:12 (திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்
இடி முழக்கத்தின் மக்கள் என்று அழைக்கப்பட்ட செபதேயுவின் புதல்வரும் யாக்கோபின் சகோதரரும் அபோஸ்தலருமான யோவான் எழுதிய நற்செய்தி நூல் இதுவாகும். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக இச்சமூகம் "யோவானின் சமூகம்" (Johannaine Community) என்று அறியப்படுகிறது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிபி 70-இன் எருசலேமின் அழிவுக்கு பின்பும் பத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தப்படுவதற்கு முன்பும் இந்த நற்செய்தி நூல் எழுதப்பட்டது. சுமார் கிபி 80- க்கும் கிபி 90- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொய் போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி இயேசு மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று துர் உபதேசத்தை பரப்பினர். இதற்கு பதில் கூறும் விதமாகவும் இயேசு மாம்சத்தில் பிறந்தார் என்றும் அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றும் மற்றும் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் என்று சாட்சி கூறவும் யோவான் இந்த நற்செய்தி நூலை எழுதினார்.
5. திருவசன விளக்கவுரை
யோவான் 21-ம் அதிகாரத்தின் முதல் 14 வசனத்தில், இயேசு கிறிஸ்துவினுடைய கடைசி அற்புதமும் (வச. 5,8,10,11); மற்றும் இயேசு கிறிஸ்துவினுடைய உணவு பரிமாறுதலும் (வச.9,12,13) எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின்பு சீசர்கள் எல்லாரும் பண்டிகையை முடித்துவிட்டு மீண்டும் எருசலேம்லிருந்து, கலிலேயவை நோக்கி பயணம் செய்கிறார்கள். பேதுருவும் அவனோடு கூட சில சீசர்களும் இரவு நேரத்தில் மீன் பிடிக்க திபேரியா கடற்கரைக்கு செல்கிறார்கள் அங்கே, உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார் (வச.14). விடியற்காலையில் இயேசு கடற்கரையில் நிற்கிறார் (வச.4) ஆனால் சீசர்களால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒருவேளை அதிகாலையின் இருட்டான நேரமாக இருந்தபடியினால் இயேசுவின் முகத்தை தெளிவாக பார்க்க முடியமல் இருந்திருக்கலாம். இரவு முழுவதும் பிரயாசப்பட்டு ஒரு மீன் கூட பிடிக்காமல் இருந்தவர்கள் இயேசுவின் வார்த்தையை கேட்டு வலையை போட்டத்தினால் 153 பெரிய மீன்களை பிடித்தார்கள். அதற்க்கு பின்பு தான் அவரை இயேசு என்று அறிந்து கொள்கிறார்கள் (வச. 7).
இயேசு கிறிஸ்துவின் உணவு பரிமாறுதல்:(வச. 9,12,13): இங்கே இயேசு கிறிஸ்து அவருடைய சீசர்களுக்கு காலை உணவை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். பாலஸ்தினா நாட்டில் மீன் மற்றும் ரொட்டியை உணவாக உண்பார்கள்.
இங்கு வசனம் 9-இல் மீன் என்று ஒருமையில் கொடுக்கப்பட்டிருப்பதால் இது மிகப்பெரியக் மீனை குறிக்கிறது. இரவு முழுவதும் மீன் பிடித்து ஒன்றும் அகப்படாமல் களைத்து போய் இருக்கின்ற சீசர்களுக்கு இயேசு உணவை ஆயத்தம் செய்து வைத்து அவர்களை உணவு சாப்பிட அழைத்து அதை அவர்களுக்கு பரிமாறுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
கிறிஸ்துவின் மரணம் & உயிர்ப்புக்குப் பின்பு சீடர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே இடைவெளி இருந்தது. இயேசு தம் தரிசனங்கள் மூலம் தம்மோடு அவர்களை ஐக்கியமாக்க செயல்பட்டார். அதில் ஒரு நிகழ்வு தான் இது. விருந்தோம்பல் வாயிலாக இணைப்பை ஏற்படுத்தினார். விருந்து இடைவெளியை நீக்கி உறவை வளர்க்கும்.
7. அருளுரை குறிப்புகள்
கிறிஸ்துவின் விருந்தோம்பலுக்கு அழைப்பு
1. கிறிஸ்துவை அறிய அழைப்பு
யோவான் 21. 4 -7
3. நம்பிக்கையை உறுதியாக்க அழைப்பு
யோவான் 21. 6
3. உறவை வளர்க்கும் அழைப்பு
யோவான் 21. 12
Acknowledgement
T. Rebin Austin
UBS, Pune.
0 Comments