Ad Code

Rev. ராக்லேண்ட் மிஷனரி வரலாறு • REV THOMAS GAJETAN RAGLAND

பிறப்பு: 26/4/1815
ஊழியம்: 1845 - 1858 இந்தியா
இறப்பு: 1858

ராக்லாண்ட் தனது ஊழியப்பாதைதில் பல போராட்டங்களை சந்தித்தார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தானும் அவர்களில் ஒருவன் தான் என்று காண்பிப்பதற்காக தன் தலையில் இருந்த தொப்பியை கழற்றி கூழ் வாங்கி குடித்தார் ராக்லாண்ட். உயர் ஜாதி மக்கள் தாழ்ந்த ஜாதி மக்களை ஊருக்குள் இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது என்ற விதி இருந்த அந்நாட்களில், இதனை எதிர்த்த ராக்லாண்ட் தாழ்குல ஏழை மக்களுக்காக ஒரு கிணற்றை வெட்டினார்.இதனால் பலர் பயனடைந்தனர். சிவகாசியை பொருத்தவரை இவருடைய மறைவுக்குப் பின் பலர் ரகசியமாக கிறி ஸ்துவை தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மறைவாக ஆராதித்துவந்தனர். ராக்லாண்டின் மரணத்தருவாயில் அவரை அறிந்தவர்கள் அவரை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதராக எண்ணினர்.

ராக்லாண்ட் தன் ஊழியப்பாதையின் ஆரம்பத்திலிருந்தே பல போராட்டங்களை சந்தித்தார். அவருடன் பணி செய்த ஃபென் நச்சு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சுமார் ஓராண்டு பணி செய்ய முடியாமல் இருந்தார். பின்னர் 1858-ஆம் ஆண்டு ராக்லாண்ட் அவர்களுடன் பணி செய்து வந்த எவ்ரி, பேரன்பெர்ஃக் ஆகிய இரு இளம் மிஷனெரிகளும் காலரா வியாதியால் தாக்கப்பட்டனர். ராக்லாண்டின் உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டது.1858, அக்டோபர் மாதம் சிவகாசியில் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போதே ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். வட நெல்லையின் மிஷனரி' என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.

-------------------

Meyego 

Post a Comment

0 Comments