Ad Code

தாவீது சுந்தரானந்தம் √ David Sundaranandam


மண்ணில் : 1772
விண்ணில் : 1806
நாடு : இந்தியா 
தரிசன பூமி : இந்தியா

இன்றைய உலகில் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும், இன்னொருபுறம் வேதனையளிக்கும் செயல்பாடுகள் அதனுள்ளே காணப்படுவது கிறிஸ்தவர்களிடையே விசுவாச சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

இனப் பிரச்சனைகள் சாதி பிரச்சனைகள் இவை எல்லாம் ஒழிந்தால் தான் கிறிஸ்தவம் தழைக்கவும் செழிக்கவும் முடியும்.

அனைவரும் சமமாகவும், அன்பாகவும் வாழ்வதை விட்டு விட்டு உயர்வு தாழ்வுகளை உடன்பிறப்பாக்கினால் உபத்திரவங்கள் நிச்சயம் பெருகவே செய்யும். ஜாதிப் பிரச்சனைகள் ஊழியர்களிடமும் காணப்படுவது மிகவும் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கக்கூடியது.

தாவீது சுந்தரானந்தம், இனப் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஊழியத்தையே பிரதானமாகக் கொண்டு மக்களுக்கு இரட்சிப்பின் செய்தியைக் கூறலானார். இனப் பிரச்சனையால் சுவிசேஷத்தை விசுவாசியாமல் இருந்த மக்களை இவர் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்.

முதலூர் என்ற முதல் கிறிஸ்தவ கிராமத்தை உருவாக்கினார். தென் திருநெல்வேலியில் திருச்சபைகள் உருவாக தேவனால் பயன்படுத்தப்பட்டார். இவரால் கிறிஸ்தவர்களான 5372 பேரை சத்தியநாதன் ஐயர் 1802, 1803ம் ஆண்டுகளில் திருமுழுக்கு கொடுத்தார். 

புற மதத்தவரின் கொடுமைகள், உபத்திரவங்கள் வேதனைகள் மத்தியிலும் ஆயிரமாயிரம்பேர் கிறிஸ்தவர்களானார்கள்.

முதலூர் ஆலயம் பிற மதத்தவரால் தாக்கப்பட்டது. ஆயினும், இவரால் மக்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியானார்கள். 

பெத்லகேம் என்னும் ஊரில் அவர் சென்றபோது சிலரால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி திகைப்பை ஏற்படுத்துகின்றது. 

34 வயதில் திருநெல்வேலியின் இரத்தசாட்சியாக மரித்ததாவீதின் ஊழியம் மிக மிகச் சிறந்ததே. 

Courtesy: வேதாகம நண்பன்-

Post a Comment

0 Comments