Ad Code

கிறிஸ்துவின் அமைதியை பகிர்தல் • Sharing the Peace of Christ • CSI Tirunelveli Diocese 14/5/2023

1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு
தேதி: 14/05/2023
வண்ணம்: வெள்ளை 
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:

2. திருவசனம் & தலைப்பு
 கிறிஸ்துவின் அமைதியை பகிர்தல்
  நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள். அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். 
பிலிப்பியர் 4:9 (பவர் திருப்புதல்)
நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார். 
பிலிப்பியர் 4:9 (திருவிவிலியம்)

3. ஆசிரியர் & அவையோர்
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் பிலிப்பியர் நிருபத்தின் ஆசிரியர் என்பது புற மற்றும் அக சான்றுகள் தெளிவுப்படுத்துகிறது.
பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் எங்கும் உள்ள விசுவாசிக்களுக்கும் இந்த நிருபம் எழுதப்பட்டதுப்பட்டது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
சுமார் கி. பி. 62-ல் பவுல் ரோம சிறையில் வைத்து இந்த நிருபத்தை எழுதினார் (பிலி.1:13, 4:22). பவுல் தன்னுடைய இரண்டாம் மிஷனரி பயணத்தின் போது பிலிப்பு சபையை நிறுவினார் (அப்.16:11-40). பவுல் சிறையில் இருந்த போது அவருக்கு ஏற்ற வேளையில் பிலிப்பு விசுவாசி எப்பாபிரோ தீத்து மூலம் உதவி செய்த பிலிப்பி சபையாருக்கு நன்றி சொல்லி எழுதிய நிருபமே பிலிப்பியிர் நிருபம்.
பிலிப்பு திருச்சபையில் ஒன்றாக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் அதனால் பவுல் நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் (பிலி.4: 1,2,4,6,7).

5. திருவசன விளக்கவுரை 
அப்போஸ்தலனகிய பரிசுத்த பவுல் பிலிப்பியிர் திருசபைக்கான தன்னுடைய கடைசி அறிவுரையை பிலி.4-ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். வசனம் 8-இல் எது முக்கியம் மற்றும் எது நன்மையை கொண்டு வரும் என்பதை பற்றி எழுதுகிறார். வச.9-ல் கிறிஸ்தவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து பவுல் அறிவுறுத்தகிறார். இங்கு பவுல் நான்கு செயல்பாடுகளை (Verb) முக்கியப்படுத்துகிறார்.
1. கற்றும் (learned):
பவுல் பிலிப்பியர் திருச்சபைக்கு தான் முன்பு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தகிறார்.
2. அடைந்தும் (Received)
பிலிப்பியிர் சபை விசுவாசிகள் கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை (death and resurrection of Christ and deeds and work of Christ) மற்றும் கிறிஸ்தவ நீதி நெறிமுறைகளை பவுல் அப்போஸ்தலனிடமிருந்து பெற்று கொண்டார்கள். பவுல் இந்த சுவிசேஷத்தை ஆண்டவரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்(1கொரி.11:23).
3. கேட்டும் (Heard)
இங்கே பவுல் தன்னுடைய குணாதிசயத்தையும் மற்றும் அவருடைய கிறிஸ்தவ நடக்கயையும் பற்றி குறிப்பிடுகிறார். பவுல் எப்படி சோதனைகளை சந்தித்தார், எப்படி அதை மேற்கொண்டர் என்பதை பிலிப்பியிர் திருச்சபை மக்கள் நன்றாக கேட்டு அறிந்து வைத்திருந்தார்கள்.
4. கண்டும் (Saw)
பவுல் வெறுமனே பிரசங்கம் மாத்திரம் பண்ணவில்லை மாறாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தார் (Model to Imitate- பிலி. 3:17, 1 கொரி. 11:1). பவுல் அப்போஸ்தலர் எதை போதித்தாரோ அதன்படி வாழ்ந்தும் காண்பித்தார். இதை பிலிப்பியிர் திருசபையினர் கண்டும் கேட்டும் இருக்கிறார்கள்.

6. இறையியல் & வாழ்வியல்
பவுல் அப்போஸ்தலருடைய வார்த்தை மற்றும் வாழ்கை மூலம் இந்த நான்கு செயல்களையும் கற்றுக்கொண்ட பிலிப்பியிர் திருச்சபையின் மக்கள், அவற்றை தங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதை பவுல் அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். இவற்றை எல்லாம் கடைபிடிக்கும்போது சமாதானத்தின் ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார் என்கின்ற ஒரு உறுதியான நம்பிக்கையை பவுல் அப்போஸ்தலர் பிலிப்பியர் திருச்சபைக்கு அளிக்கிறார்.

7. அருளுரை குறிப்புகள்
      கிறிஸ்துவின் அமைதியை பகிர்தல்
1. கீழ்ப்படிதலில் கிடைக்கும் கிறிஸ்துவின் அமைதி
2. பறைசாற்ற வேண்டிய கிறிஸ்துவின் அமைதி

எழுதியவர்:
T. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர், கூடன்குளம் சேகரம்.

Post a Comment

0 Comments