Ad Code

பற்றுறுதியில் பேணி வளர்த்தல் • Nurturing in Faith • CSI Diocese of Tirunelveli



1. ஞாயிறு குறிப்புகள்

ஞாயிறு : பெந்தேகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் 9ம் ஞாயிறு (திரித்துவ திருநாளுக்கு பின்வரும் 8ம் ஞாயிறு)

தேதி : 30/07/2023

வண்ணம் : பச்சை

திருமறைப்பாடங்கள்: 

பழைய ஏற்பாடு − நீதிமொழிகள் 23: 15−26

புதிய ஏற்பாடு − எபேசியர் 6 : 1−8

நற்செய்தி பகுதி − மத்தேயு 18 : 1−6

சங்கீதம் 127

2. திருவசனம் & தலைப்பு

பற்றுறுதியில் பேணி வளர்த்தல்

(பவர் திருப்புதல்) பிதாக்களே , நீங்களும் உங்கள் பிள்ளைகளைச் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் , போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.( எபேசியர் 6:4)

(திருவிவிலியம்) தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி , அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்.     (எபேசியர் 6:4)

3.ஆசிரியர் & அவையோர்

இந்த எபேசியர் கடிதத்தை  அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக கருதப்படுகிறது.எபேசு பட்டணத்திலுள்ளவர்களுக்கும், எபேசு திருச்சபைக்கும் எழுதினார்.

4. எழுதப்பட்ட காலம்  & சூழ்நிலை

இந்த கடிதத்தை பவுல் ரோம் பட்டணத்தின் சிறையில் இருக்கும் போது கிபி 62 இல் எழுதி இருக்கலாம் என்று வேத அறிஞர்களால் கருதப்படுகிறது. இந்த கடிதத்தில் ஒற்றுமை அதாவது ஒரே மாதிரி என்ற கருப்பொருளைக் கொண்டு எழுதப்பட்டிருப்பது அறியலாம். ஆண்டவர் தம் மக்களை எப்படி நடத்தியுள்ளார் என்பதையும் நாம்  எப்படி அதை வாழ்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கூறுகிறார். எபேசியில் உள்ள புதிய விசுவாசிகளுக்கு பவுல் அவர்களை உற்சாகம் படுத்தும்படியாக கடிதத்தை எழுதினார்.அவர்கள் தேவனுடைய அன்பையும் வல்லமையையும் அறிந்து கொள்ள விரும்பினார். அத்துடன் இயேசு மரித்தார் மரணத்திலிருந்து உயிருடன் எழுந்தால் அதனால் விழுந்து போன உலகையும் வீழ்ந்து போன மக்களையும் தேவன் பட்சமாய் மீட்கப்படுகிறார் என்று அவர்கள் அறிந்து கொள்ள விரும்பினார்.இந்த கடிதம் இயேசுவை அனைவருக்கும் கர்த்தர் என்றும் அனைவரையும் நேசிக்கிறார் என்றும் கூறுகிறது.

5.திருவசன விளக்கவுரை

எபேசியர் 6:4 வசனத்தில் பெற்றோருக்கு ஆலோசனையாக பவுல் கூறுகிறதை காணலாம். பிதாக்களே உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாமல், அது செய் , இது செய்  என்று அவர்களை கோபப்படுத்தாமல் எரிச்சல் அடைய செய்யாமல் அன்போடு கனிவோடு அவர்களுடன் பேச வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் பெற்றோர்களுடைய அன்பை மிகவும் எதிர்பார்ப்பார்கள் ஆகையால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்போடும், கனிவோடும் நடந்து கொள்ள  ஆலோசனை கூறுகிறார். மேலும் அவர்களை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் அதாவது தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்கள் எதுவாக இருந்தாலும், பாவமாக இருந்தாலும் அதை கண்டித்து அவர்களை மனம் திரும்ப செய்து அவர்களை தேவனுக்கேற்ற பாதையில் கண்டிப்போடு வழிநடத்த வேண்டும் என்றும்,போதனையிலும் தேவனைத் தேட தேவனோடு பேச,  வேதத்தை வாசிக்க, நேசிக்க,  நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் அறிவுரை கூற வேண்டும் போதிக்க வேண்டும் என்று சொல்லி பவுல் ஆலோசனை கூறுகிறார். ஆகையால் நாம் கனிவினால், கண்டிப்பினால்  கற்பித்தலினால் பற்றுறுதியில் வளர்க்க வேண்டும் என்று இந்த திருவசனம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

6. இறையியல்  & வாழ்வியல்

இன்றைய உலகில் தேவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகில் உள்ள தலைவர்களையும் நடிகர்களையும் பற்றிக்கொண்டு வாழ்வை வீணாகக் கழிக்கின்றன. அப்படிப்பட்ட சந்ததினருக்கு தேவனை பற்றும் பற்றுதியில் வளர்ப்பது மிகவும் அவசியமானது. அது வேண்டும் இது வேண்டும் நாம் நினைக்கிறதை செய்ய வேண்டும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அதை உருவாக்கிய அதை படைத்த தேவனை மறந்து விடுகிறோம் .அவரைப் பற்றிக் கொள்ளாமல் அவர் படைத்த பொருட்களை சார்ந்து இருக்கிறோம் தேவன் மூலமாய் இந்த நன்மையை பெற்றிருக்கிறோம் என்ற பற்றுதியில் நிலை நிற்க நாம் முயற்சிப்போம்.

7. அருளுரை  குறிப்புகள்

       பற்றுறுதியில் பேணி வளர்த்தல்

1.கனிவினால் பற்றுறுதியில் வளர்த்தல்.

எபேசியர் 6:4 

2.கண்டிப்பினால் பற்றுறுதியில் வளர்த்தல்

எபேசியர் 6 :4 , நீதிமொழிகள் 23:17,26

3.கற்பித்தலினால் பற்றுறுதியில் வளர்த்தல்

எபேசியர் 6:4 , மத்தேயு 18 : 3,4


எழுதியவர்

பே. மான்சிங் கிளிண்டன்

குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி , சென்னை.

Post a Comment

0 Comments