Ad Code

Holy Eucharist • CSI Diocese of Tirunelveli

 

1. ஞாயிறு குறிப்புகள் 

ஞாயிறு: பெந். திரு. பின். 12ம் ஞாயிறு ( திரித்துவ -11) 

தேதி: 20.08.2023

வண்ணம்: பச்சை

திருமறைப் பாடங்கள்: ஆதி : 14: 17-24, 1 கொரி : 10: 15-17 & யோவா: 6: 48-58

சங்கீதம்: 104: 14-30

2. திருவசனம் & தலைப்பு

                    திருவிருந்து ( பரிசுத்த நற்கருணை) 

           யோவான் 6.56  (பவர் திருப்புதல்) என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

(திருவிவிலியம்) எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

3. ஆசிரியர் & அவையோர் 

தூய யோவான் நற்செய்தி நூல், செபதேயுவின் குமாரனாகிய தூய யோவான் சாட்சி கொடுத்து / சாட்சியாக எழுதினார் (யோவா: 21:24). இராப்போஜனத்தின் போது இயேசு கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்திருந்தவர் இந்த தூய யோவான் என்பவர் ( யோவா: 13: 23-25). இயேசு கிறிஸ்து தாம் சிலுவை மரத்தில் அடிக்கப்ட்ட பின்பு தன்னுடைய தாய் மரியாளை தூய யோவானிடம் ஒப்படைத்தார் ( யோவா: 19: 25-27). 

இது புதியஏற்பாட்டின் நான்காவது சுவிஷேச புஸ்தகம். இங்கு தேவாலயம், ஆராதனை, ஞானஸ்நானம் & திருவிருந்து ஆகிய கிறிஸ்தவத்தின் உள்ளான கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை

இந்நூல் எபேசு பட்டணத்திலிருந்து கி.பி 90-ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிறிஸ்து இயேசுவின் மேல் ஆழ்ந்த விசுவாசமுன்டாக வேண்டுமென்பதை வலியறுத்துவதே இந்த சுவிசேஷத்தின் நோக்கம் ( யோவா: 20.31) 

5. திருவசன விளக்கவுரை 

உணவும், உணவு அருந்துதலும் இறைவன் தம் மக்களோடு வாழ்வைப் பகிர்ந்து கொள்வதை உணர்த்துகின்றன. இஸ்ரவேல் மக்களோடு ஆண்டவர் பயணம் செய்தபோது அவர்களுக்கு மன்னாவும், காடையும் & ஓரேப்பிலிருந்து ஓடிய தண்ணீரும் அவர்களைக் கானான் தேசத்தில் சேர்க்க உதவியது. 

இங்கு இயேசு கிறிஸ்து பகிர்ந்து கொண்ட உணவு இறையரசில் நம்மை இணைப்பதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல கிறிஸ்து இயேசு நம்முடைய வாழ்வில் கலந்திருக்கிறார் என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. 

திருவிருந்து வாயிலாக நாம் கடவுளோடு இணைகின்றோம். அதாவது ஐக்கிய உறவு ஏற்படுகிறது. இது நம்பிக்கையின வெளிப்பாடு ஆகும். மக்களின் மீட்புக்காக இறைவனின் திருமகன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த அன்பின் திருக்காட்சியை திருவிருந்து சித்தரிக்கிறது. எனவே திருவிருந்தில் பங்குகொள்ளும் போது நாம் ஆண்டவரோடு கூட இணைக்கப்பட்டவர்களாயும் & அவரிலே நிலைத்திருக்கிறவர்களாயும் இருக்கிறோம் (1 கொரி: 10: 17),(யோவா:6.56). 

6. இறையியல் & வாழ்வியல்

சாக்கிரமெந்தாகிய திருவிருந்து Sacrement of alter, Eucharist, Holy Communion, Love feast & Lord’s Supper என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக, திருவிருந்து என்பதன் பொருள் “நன்றியுணர்வு” என்பதாகும். இச்சொல் இறைவனின் வியத்தகு செயல்களால் மனிதர்கள் அடைந்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவதை உணர்த்துகிறது. புதிய ஏற்பாட்டில் நன்றி செலுத்துதலை குறிக்கும் கிரேக்கச் சொல் “ இயூக்கரிஸ்டியோகாரிஸ்”  (Eucharist) ஆகும். 

இன்றைக்கு திருவிருந்து அர்த்தமற்ற ஒன்றாக சென்று போய்க் கொண்டிருக்கிறது. முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை ஆராதனையில் பங்கு பெறாமல் திருவிருந்து எடுக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டு போவது வருத்தமான செயலாகும். இது திருவிருந்தில் கடவுளின் செயல்பாடு குறித்த நம்பிக்கையற்ற தன்மையை குறிக்கிறது. கடவுள் பயம் இல்லை எனலாம். பயபக்தியுடன் மற்றும் உள்ளான மறை பொருள் உணர்ந்து திருவிருந்தில் பங்கு பெற்றால் இறைஉறவு ஸ்திரப்படும்.

7. அருளுரை குறிப்புகள்

1. கடவுளோடு ஐக்கியப்படுதல் (Relationship)

2. கடவுளில் நிலைத்திருத்தல் (Obeying the Word of God and following)

3. கடவுளில் பெலப்படுதல் (Spritual Strength)


எழுதியவர்

திரு. D. ஜோயல் ராஜா சிங்

சபை ஊழியர்

KTC நகர் சேகரம் 

Post a Comment

0 Comments