Ad Code

பல்சமய சூழலில் கிறிஸ்தவர்களின் பங்கு • Responsibility of the Christians in the Puluralistic Context • CSI Diocese of Tirunelveli

 


1. ஞாயிறு குறிப்புகள் 

ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் 18 ஆம் ஞாயிறு

தேதி: 8/10/2023

வண்ணம்: பச்சை

திருமறைப் பாடங்கள்:

சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 

     பல்சமய சூழலில் கிறிஸ்தவர்களின் பங்கு

     (பவர் திருப்புதல்) அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 

     (திருவிவிலியம்) திருத்தூதர் பணிகள் 10:35 எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். 

3. ஆசிரியர் & அவையோர் 

கலிலேயாவிலிருந்து எருசலேமை நோக்கி இயேசுவின் பயணத்தை தமதுநற்செய்தி நூலில் எடுத்துக் கூறிய புனித லூக்கா, இந்நூலில் எருசலேமிலிருந்து உலகின் கடைஎல்லையான உரோமைக்கு நற்செய்தி எப்படி பரவிற்று என்பதை அழகுடன் விளக்குகிறார். முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் தான் இந்நூலின் பிரதான அவையோர். ஆனால் இன்று வரை திருச்சபைக்கு வழிகாட்டும் மாதிரி வரலாற்று சுவடாக இந்நூல் உள்ளது.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை

லூக்கா தமது நூலை கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் அதாவது கி.பி. 80-க்கும் 90க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்க வேண்டும். இந்நூல் கிரேக்க நாட்டிலுள்ள அகாயா என்ற இடத்திலிருந்து எழுதப்பட்டது. காலத்தையும் சூழலையும்அரசியல் பின்னணிகளையும் தூய ஆவியாரின் துணைகொண்டு புரிந்து இறையாட்சியின் விழுமியங்களுக்கு சான்றுபகர்வது எப்படி? என்று இந்நூல்நமக்கு பாடம் கற்றுத் தருகின்றது. 

5. திருவசன விளக்கவுரை 

அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரம் கிறிஸ்தவ வரலாற்றில் நடந்த வரலாற்று திருப்புமுனை சம்பவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? இயேசு கிறிஸ்து என்னும் உலக மீட்பர் யூத சமயம் கடந்து, யூத இனம் கடந்து, யூதேயா பகுதி கடந்து, ஒரு புறசமயத்தான், வேற்றினத்தான், அந்நியன் என்று கருதப்பட்ட ஒரு நபரை, கிறிஸ்தவ உலகில் பிரதான அப்போஸ்தலர் எனப்பட்டவர் சந்தித்த சம்பவம். ஆம் கொர்நெலியு என்னும் நூற்றுக்கதிபதியை சீமோன் பேதுரு சந்தித்த சம்பவம்.

பேதுரு உட்பட யூதர் அல்லாத பிற மக்கள் மீது வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தனர்; பாகுபாடு எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் பேதுரு அன்று கண்ட மிருகங்களின் காட்சி குறித்த தரிசனம் மற்றும் கொர்நெலியுவை சந்திக்க சொன்னது போன்றவை பேதுருவின் எண்ணத்தை மாற்றின. கொர்நெலியு வீட்டுக்கு சென்ற பேதுரு தன் பிரசங்கத்தை இவ்வாறு தொடங்குகிறார்: "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்" (10:34).

பாகுபாடு அல்லது பட்சப்பாதம் (Partiality) என்பது ஏதோ ஒரு பின்னணி, அல்லது பலத்தை வைத்து, ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது அல்லது ஏற்றத் தாழ்வோடு நடத்துவது ஆகும். இந்த பிரச்சினை ஆதி சபையில் இருந்துள்ளது. யூத கிறிஸ்தவர்கள் பிற இன மக்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்க முன் வர தயங்கினர். யூதன் என்ற அடையாளம் அவர்களை தடை செய்தது. இந்த சூழலில் தான் பேதுருவுக்கு கடவுள் சமத்துவத்தை கற்றுக் கொடுத்தார்.

6. இறையியல் & வாழ்வியல்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா பல்சமய நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று உறுதி கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அது கேள்விக்குறியாக உள்ளது. பல இனப் பாகுபாடுகள், கலகங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்தவர்களாகிய நமது பங்கு என்ன?

கிறிஸ்தவம் என்பது ஒரு மத அல்லது இன அடையாளம் அல்ல என்ற புரிதல் நமக்கு வேண்டும். நாமும் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டியவர்கள். ஆனால் நாமே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாய் மாறிக்கொண்டு இருக்கிறோம். நாம் ஆராதிக்கும் கடவுள் இயேசு கிறிஸ்து பட்ச பாதம் இல்லாதவர். ஆனால் நாம் பாகுப்பாடு காட்டி கொண்டு இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். முதலில் நம் சபைகளில் பாகுபாடு இருக்கக் கூடாது. நம் தெருக்களில், ஊரில், பணி ஸ்தலங்களில் சமத்துவம் நம் மூலமாய் நிலைநாட்டப்பட முயல்வோம்.

7. அருளுரை குறிப்புகள்

      பல்சமய சூழலில் கிறிஸ்தவர்களின் பங்கு

  1. வேற்றுமைகளைக் களையும் கிறிஸ்தவராய் வாழ்வோம்

       (சாதி, மதம், இனம், என்னும் வேறுபாடுகள்)

  2. ஒன்றுபட வழி காணும் கிறிஸ்தவராய் வாழ்வோம்

  (அனைவரும் இறைவனின் ஒரே படைப்பு என்பதில் ஒற்றுமை காணல்)

  3. ஒன்றிணைந்து செயல்படும் கிறிஸ்தவராய் வாழ்வோம்

  (பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் என உதவி செய்து வாழ்தல்)


Acknowledgement

Meyego 

meyegoofficial@gmail.com

Post a Comment

0 Comments