Ad Code

2024 சட்டவாக்கிய அருளுரை • CSI Diocese of Tirunelveli • Rebin Austin • Sermon Notes


1. குறிப்புகள் 
தினம்: புதுவருடப் பிறப்பு
தேதி: 1/1/2024
வண்ணம்: வெள்ளை 
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 

2. சட்டவாக்கியம் 
     ஏசாயா 44:3 Isaiah 
     (பவர் திருப்புதல்) தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 
     (திருவிவிலியம்) ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன். 
   (KJV) For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring:

2. ஆசிரியர் & அவையோர்
   பழைய ஏற்பாட்டின் பவுல் என்று அழைக்க கூடிய சிறப்பை பெற்றவர் ஏசாயா ஆவார். ஏசாயாவின் தகப்பன் யூத அரசனான யோவாசின் இளைய மகன் ஆமோத். ஏசாயா ஒரு சிறப்பான அரச குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் சிறந்த மொழி நடையும், இலக்கிய நடையும் பெற்றவர். இவரது மனைவி தீர்க்கதரிசினியாக இருந்தார், இவருக்கு இரண்டு குமாரர்கள் இருந்திருக்க வேண்டும் ( 7:3; 8:3). எருசலேமில் தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார். இவரது தீர்க்கதரிசனம் அரசனாகிய மனாசேக்கு எரிச்சலை ஏற்படுத்தினதால், மனாசே இவரை இரு தடிகளுக்கு நடுவே கட்டி வைத்து வாளினால் அறுத்து கொலை செய்ததாக யூத பாரம்பரியம் கூறுகிறது. எபி. 11:37 இதை குறிப்பாதாகவே இருக்க வேண்டும்.

            யூதாவை தேவனிடம் திருப்புதல் மற்றும் மேசியா மூலம் வரும் இரட்சிப்பை எடுத்துரைத்தல். (ஏசாயாவுக்கு பின் 150 ஆண்டுகள் கழித்து கோரேசின் ஆணைப்படி சிறைவாசிகள் திரும்பிவந்து ஆலயத்தை காட்டுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் சிறப்பிற்குரியது).

 3. எழுதப்பட்ட காலம்
         ஏசாயாவின் தீர்க்கதரிசன ஊழியம் சுமார் கி. மு. 740 முதல் 681 வரை (1:1). 1-39 அதிகாரங்கள் கி. மு.700 மற்றும் 40-46 வரையிலான அதிகாரங்கள் கி. மு. 681-லும் எழுதப்பட்டதாக கருதலாம்.

5. திருவசன விளக்கவுரை 
ஏசாயா 43 : 22 - 44:23 - வரையுள்ள வசனங்கள் ஆண்டவர் யாக்கோபை நினைவுகூரும்வதையும், மீட்டெடுப்பதையும் குறித்ததான வாக்குத்தத்தத்தை எடுத்துரைக்கிறது.

ஏசாயா 43 :22-28 -இல் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுடைய பழைய வரலாற்றை நினைவு கூறும்படி வலியுறுத்துகிறார். ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து அந்நிய தெய்வங்களுக்கு தங்களுடைய பலிகளை செலுத்தினார்கள் ஆனாலும் ஆண்டவர் அவர்களுக்கு தம்முடைய கிருபையை காண்பித்து அவர்களுடைய பிதாக்களுக்கு கிடைக்காத (43:27-28) புதிய வாய்ப்பை/ காலத்தை (43:25) மீண்டும் கொடுத்தார்.

      ஆண்டவர் இஸ்ரவேல் / யாக்கோபை நினைவுகூர்ந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த புதிய காலத்தைக் குறித்து ஏசாயா 44: 1-5 வசனங்கள் எடுத்துரைக்கிறது. 

ஏசாயா 44 :1 யாக்கோபு / இஸ்ரவேல் மக்களின் விடுதலையை குறித்ததான கர்த்தருடைய வாக்குத்தத்தை, கட்டளையோடு (v.1- listen Israel) நேரடியாக எடுத்துரைக்கிறது

வசனம் 3-இல் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில் எதிர்காலத்தில் வரப் போகிற புதிய வாழ்க்கையை குறித்ததான வாக்குத்தத்தை பாலைவனத்தில் தண்ணீர் உண்டாகும் போது புத்துணர்ச்சியும் புது வாழ்வும் அடைகிற தாவரங்ககளை உருவகமாகக் கொண்டு ஆண்டவர் தீர்க்கதரிசி மூலம் எடுத்துரைக்கிறார்.

ஆண்டவர் தம்முடைய ஆவியை அனுப்புவதின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களின் சரீரத்திலும், ஆவியிலும் புத்துணர்ச்சியையும், புது வாழ்வையும் கொடுப்பேன் (v.5) என்று வாக்குத்தத்தம் பண்ணுகிறார்; ஆண்டவருடைய கட்டளைக்கு (v.1- Listen Israel) இஸ்ரவேல் ஜனங்கள் செவி கொடுத்து, அவரிடத்திற்கு திரும்பும்போது அவர் கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றுவேன் என்று தீர்க்கதரிசி மூலம் எடுத்துரைக்கிறார்.

6. இறையியல் & வாழ்வியல்
ஏசாயா தீர்க்கதரிசி பாபிலோன் சிறையிருபுக்கு (150 ஆண்டுகளுக்கு பின்பு கோரேசின் ஆட்சிகாலத்தில்) பின்பு கர்த்தருடைய ஆவியானவர் மூலம் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில் வரப் போகிற புது வாழ்வு (அ) புதிய தொடக்கத்தை (Physical and Spiritual Blessing) தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்.

7. அருளுரை குறிப்புகள்
      நீருற்றின் சந்ததி
வாக்கு:
1. வறட்சி செழிப்பாகும் (3a)
      கடவுளை விட்டு பின்வாங்கியதால் ஏற்பட்ட உலக & ஆவிக்குரிய வறட்சி நீங்குதல்.
2.வழிமரபு ஆசீர்வதிக்கப்படும் (3b)
       சந்ததியின் ஆசீர்வாதம்.
3. விடுதலை கிடைக்கும் (1 ff)
      பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. 

கட்டளை:
1. செவிகொடுங்கள் (1 ff)
      ஆண்டவர் சொல்வதற்கு, அவர் வார்த்தைக்கு செவி கொடுத்தல். இஸ்ரவேலை விக்கிரக வழிபாட்டை விட்டு விட சொன்னது போல நாம் சரிசெய்ய வேண்டிய காரியங்கள்.

Written by

Mr. T. Rebin Austin
Catechist, Kallidaikurichi Pastorate,
CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments