1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: அட்வெந்து முதல் ஞாயிறு (கிறி. பிற. திரு .நாள். முன். 4-ம் ஞாயிறு).
தேதி: 03/12/2023
வண்ணம்: செங்கரு நீலம்
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியோடு எதிர்நோக்குதல்
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும், அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
எரேமியா 33:16 ( பவர் திருப்புதல்)
அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
எரேமியா 33:16 (திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்
எரேமியாவால் வாய் மொழியால் உரைக்கப்பட்ட கர்த்தருடைய தீர்க்க தரிசன வார்த்தையை அவருடைய நண்பரும், வேதபாரகனுமாகிய பாரூக் எழுத்து வடிவத்திற்கு கொண்டு வந்தார். எரேமியா ஆசாரிய குடும்பத்தில் பிறந்தவர் (1:1). எரேமியா தன்னுடைய வாலிப பருவத்தில் கர்த்தரால் தீர்க்கதரிசியாக ஏற்படுத்தப்பட்டார். எரேமியா கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார். ஆண்டவருடைய ஊழியத்தின் நிமித்தம் அதிகமாக துன்புறுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு முன்னுதாரணமாக எரேமியா தீர்க்கதரிசி அறியப்படுகிறார். பாபிலோனிய சிறை இருப்பில் இருந்த யூதா மக்களுக்கு எழுதப்பட்டது. இந்த காலத்தில் எருசலேம் பட்டணம் முழுவதும் பாபிலோனிய மன்னரால் சிறைபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கி.மு. 586-இல் எழுதப்பட்டது. எரேமியா தீர்க்க தரிசியினால் வாய்மொழியால் அறிவிக்கப்பட்ட கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தையை அவருடைய நண்பரும், வேதபாரகனுமாகிய பாரூக் கி.மு 605 முன்னால் எழுத்து வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டது.
5. திருவசன விளக்கவுரை
எரேமியா 31ல் பழைய உடன்படிக்கைக்கு மாற்றாக வரும் புதிய உடன்படிக்கையின் தொடக்கத்தை குறித்து தீர்க்கதரிசி கூறுகிறார். எரேமியா 33ல் புதிய உடன்படிக்கையானது ஆபிரகாமின் உடன்படிக்கை (Abrahamic Covenant) மற்றும் தாவீதின் உடன்படிக்கை (Davidic Covenant) ஆகிய இரண்டு உடன்படிக்கையின் நிறைவேறுதலாய் இருக்கிறது என்று தீர்க்கதரிசி கூறுகிறார்.
எரேமியா 32&33 ஆம் அதிகாரத்தில் தீர்க்கதரிசி ஆகிய எரேமியா சிறைச்சாலையில் இருக்கும் போது ஆண்டவர் அவரோடு பேசின உரையாடலை குறிக்கிறது. எரேமியா 33ல் எதிர்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருடைய ஜனங்களுக்கு வர போகும் மீட்பை குறித்து எடுத்துரைக்கிறது.
எரேமியா 33:16ல் பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு புதிய நம்பிக்கையோடு கூடிய வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார். அது என்னவென்றால் யூதாவையும் எருசலேம் நகரத்தையும் மீட்டெடுப்பதற்காக தாவீதின் வம்சத்தில் ( எரேமியா 23:5,6 )வரப்போகிற நீதியுள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து எரேமியா தீர்க்கதரிசி மூலம் ஆண்டவர் வாக்குத்தத்தமாக எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவில் ஆபிரகாமின் உடன்படிக்கையும் (Abrahamic Covenant ) தாவீதின் உடன்படிக்கையும் (Davidic Covenant) நிறைவேறுவதைக் கொண்டு எதிர்காலத்தில் நடைபெறப்போகிற இயேசு கிறிஸ்துவின் முதலாம் மற்றும் இரண்டாம் வருகையை குறித்ததானா நம்பிக்கையையும், வாக்குத்தத்தத்தையும் எடுத்துரைக்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
சிறையிருப்பின் பாடுகள் மற்றும் கஷ்டங்கள் மத்தியிலும் எரேமியா எதிர்காலத்தை குறித்ததான நம்பிக்கையை மக்கள் நடுவில் எடுத்துரைக்கிறார். இந்த பூமியில் நாம் அநேக உபத்திரவங்களின் மத்தியில் சென்றாலும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்ததான நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தம் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
7. அருளுரை குறிப்புகள்
Written by
Mr. Rebin Austin
Catechist
Kalidaikurichi Pastorate.
0 Comments